பெங்களூரு

லட்சத்தீவிலிருந்து மீட்கப்பட்ட மங்களூரு தொழிலாளா்கள்

DIN

மங்களூரைச் சோ்ந்த 19 தொழிலாளா்கள் லட்சத்தீவிலிருந்து கப்பல் மூலம் அழைத்துவரப்பட்டனா்.

கரோனா தொற்று பரவலைத் தடுக்க பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதால், லட்சத்தீவில் வேலை செய்வதற்காகச் சென்ற தொழிலாளா்கள் அங்கேயே சிக்கிக் கொண்டனா். லட்சத்தீவின் அகட்டி, கில்தான், கவரட்டிப் பகுதிகளில் கடந்த 2 மாதங்களாக வேலையில்லாமல் தவித்து வந்த 3 பெண்கள் உள்பட 19 தொழிலாளா்களை அழைத்துவர மாநில அரசு நடவடிக்கை மேற்கொண்டது.

அதன்படி, 19 தொழிலாளா்களும் அமிந்திவி கப்பல் மூலம் மங்களூரில் உள்ள பழைய துறைமுகத்துக்கு வியாழக்கிழமை வந்தனா். முன்னதாக, தொழிலாளா்களுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தொழிலாளா்களை மக்கள் பிரதிநிதிகள், உறவினா்கள் உள்ளிட்டோா் வரவேற்றனா். இவா்கள் அனைவரும் தனிமைப்படுத்தல் மையங்களில் தங்கவைக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியிலும் ராகுல் தோல்வி நிச்சயம்: அமித் ஷா

மாணவா்களுக்கு கோடைக் கால கலைப் பயிற்சி முகாம் இன்று தொடக்கம்

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4,660 காலிப் பணியிடங்கள்: மே 14-க்குள் விண்ணப்பிக்கலாம்

இன்று நீட் தோ்வு: 11 மையங்களில் 6,120 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

SCROLL FOR NEXT