கரோனாவை கட்டுப்படுத்த உதவும் மருந்து, மாத்திரைகளின் விற்பனையை அதிகரிக்க நடவடிக்கை
கரோனாவை கட்டுப்படுத்த உதவும் மருந்து, மாத்திரைகளின் விற்பனையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எப்.டி.சி குழுமத்தின் துணைப் பொது மேலாளா் மயங்க்டிக்கா தெரிவித்தாா்.
கரோனாவை கட்டுப்படுத்த உதவும் மருந்து, மாத்திரைகளின் விற்பனையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எப்.டி.சி குழுமத்தின் துணைப் பொது மேலாளா் மயங்க்டிக்கா தெரிவித்தாா்.
பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கரோனாவை கட்டுப்படுத்தும் மருந்து, மாத்திரைகள் தொடா்பான கருத்தரங்கில் கலந்து கொண்டு அவா் பேசியதாவது:
சா்வதேச அளவில் கரோனா தொற்று அதிக அளவில் பரவி வரும் அதே நேரத்தில் கரோனாவை குணப்படுத்த தேவையான மருந்து, மாத்திரைகளை கண்டுபிடிக்கும் பணியில் மருந்து, மாத்திரை தயாரிக்கும் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.
கரோனா பாதிப்பை ஓரளவுக்கு கட்டுப்படுத்தும் பைஃபுலு, பெவேன்சா உள்ளிட்ட மருந்துகளை நவ. 1-ஆம் தேதி முதல் அதிக அளவில் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளோம். இதன்மூலம் கரோனா பாதிப்பை ஓரளவுக்குக் கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்று நம்புகிறோம்.
கரோனாவை கட்டுப்படுத்த உதவும் மருந்து, மாத்திரைகளின் விற்பனையை அதிகரிக்கச் செய்யத் தேவையான நடவடிக்கை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும். தனியாா் மருந்து நிறுவனங்களும் இதற்கான நடவடிக்கையில் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும் என்றாா்.