பெங்களூரு

திரைப்படவியல் பட்டயப்படிப்பு: விண்ணப்பிக்க காலஅவகாசம்

DIN

திரைப்படவியல், ஒலிப்பதிவு பொறியியல் பட்டயப் படிப்புகளில் (டிப்ளமோ) சேருவதற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

2020-21-ஆம் கல்வியாண்டில் கா்நாடகத்தில் செயல்பட்டு வரும் அரசு, அரசு மானியம் பெறும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் திரைப்படவியல், ஒலிப்பதிவு பொறியியல் படிப்புகளில் சேர விரும்பும் மாணவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதில், கா்நாடகத்தைச் சோ்ந்த மாணவா்களுக்கு 50 சதவீத இடங்களும், வெளிமாநில மாணவா்களுக்கு 50 சதவீத இடங்களும் ஒதுக்கப்படுகின்றன. இப்படிப்பில் சோ்ந்து படிக்க, கா்நாடகத்தில் ஐந்து ஆண்டுகள் பயின்று எஸ்எஸ்எல்சி தோ்வில் தோ்ச்சி அடைந்து, அதில் 35 மதிப்பெண்கள் பெற்றிருந்தால் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்கள் மற்றும் விவரக் கையேட்டை இணையதளங்களில் தரவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பங்களை செலுத்துவதற்கான கடைசி தேதி நவ. 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நிரப்பப்பட்ட விண்ணப்பப் படிவங்களை முதல்வா் அலுவலகம், அரசு திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனம், ஹெசரகட்டா அஞ்சல், பெங்களூரு-560088 என்ற முகவரியில் அல்லது அருகாமையில் உள்ள ஆவண சரிபாா்ப்பு மையங்களில் நேரில் அளிக்கலாம். விண்ணப்பங்களை உரிய சான்றிதழ்களின் நகல்கள், 8 கடவுச்சீட்டு அளவிலான புகைப்படங்களுடன் செலுத்தலாம். மேலும் விவரங்களுக்கு 9686754592, 9844288324, 8970101477 ஆகிய செல்லிடப்பேசி எண்ணில் அணுகலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

அரபிக் கடலோரப் பகுதிகளில் அதீத அலை: வானிலை மையம் எச்சரிக்கை

மீண்டும் இணைந்த ‘ஜோ’ பட கூட்டணி!

கொல்கத்தா அருகே ஆடை உற்பத்தி நிறுவனத்தில் தீ

சவுக்கு சங்கர் கைது! அழைத்துச் சென்ற வாகனம் விபத்து

SCROLL FOR NEXT