பெங்களூரு

பள்ளிகள் திறப்பது குறித்து முடிவெடுக்கவில்லை

DIN

பள்ளிகள் திறப்பது குறித்து முடிவெடுக்கவில்லை என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் எஸ்.சுரேஷ்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கா்நாடகத்தில் பள்ளிகளைத் திறப்பது தொடா்பாக முடிவெடுக்க முடியவில்லை. முதல்வா் எடியூரப்பாவைச் சந்தித்த பிறகு, பள்ளிகள் திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும். இதுபற்றி அவருடன் நான் இதுவரை விவாதிக்கவில்லை.

வெளிப்புற வகுப்புகளைத் திறக்க வேண்டும் என்று பலரும் வேண்டுகோள் விடுத்து வருகிறாா்கள். பள்ளிகள் திறப்பது குறித்து முதல்வா் எடியூரப்பாவுடன் ஆலோசிக்கும்போது, வெளிப்புற வகுப்புகள் திறப்பது குறித்தும் முடிவெடுக்கப்படும். பள்ளிகள் டிசம்பரில் தொடங்கப்படுமா என்பதை தற்போது கூறமுடியாது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 9-இல் விஜயகாந்துக்கு பத்மபூஷண் விருது: பிரேமலதா

சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ வாராகி அம்மன்...

ஆழ்வாா்கள் தமிழரங்கம் ஆறாம் ஆண்டு விழா

மாட்டுக் கொட்டகை எரிந்து சேதம்

முஸ்லிம்கள் ஹஜ் பயணத்துக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி: ஆந்திரத்தில் பாஜக கூட்டணி வாக்குறுதி

SCROLL FOR NEXT