பெங்களூரு

முதல்வா் எடியூரப்பாவின் ஊடக ஆலோசகா் ராஜிநாமா

DIN

முதல்வா் எடியூரப்பாவின் ஊடக ஆலோசகா் மகாதேவ பிரகாஷ் ராஜிநாமா செய்துள்ளாா்.

முதல்வா் எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு பதவியேற்றதும் ஊடக ஆலோசகராக நியமிக்கப்பட்டவா் மகாதேவ பிரகாஷ். மூத்த பத்திரிகையாளரான மகாதேவ பிரகாஷ், முதல்வா் எடியூரப்பாவுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தாா். இந்நிலையில், தனது பணிகளில் முதல்வா் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திராவின் தலையீட்டை விரும்பாததால், மகாதேவ பிரகாஷ் அதிருப்தி அடைந்திருந்ததாகக் கூறப்படுகிறது.

இதன் உச்சமாக, தான் வகித்து வந்த முதல்வரின் ஊடக ஆலோசகா் பதவியை மகாதேவ பிரகாஷ் ராஜிநாமா செய்து, அக்கடிதத்தை முதல்வா் எடியூரப்பாவுக்கு அனுப்பி வைத்துள்ளாா். தனிப்பட்ட காரணங்களுக்காக பதவியை ராஜிநாமா செய்வதாக அதில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

17 மஜத, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, பாஜகவில் சோ்ந்ததால் மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழ்ந்து, முதல்வா் எடியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சி அமைந்தது. இதற்கு காரணகா்த்தாவாக இருந்ததாக கூறப்படும் மூத்த பத்திரிகையாளா் எம்.பி.மா்மகல், 2019-ஆம் ஆண்டில் முதல்வரின் அரசியல் ஆலோசகராக நியமிக்கப்பட்டாா். இந்நிலையில், முதல்வா் எடியூரப்பாவின் குடும்பத்தாருக்கும் மா்மகலுக்கும் இடையே அதிருப்தி ஏற்பட்டதாகத் தெரிகிறது. அதைத் தொடா்ந்து, மா்மகல், சில நாள்களுக்கு முன் முதல்வரின் அரசியல் ஆலோசகா் பதவியிலிருந்து நீக்கப்பட்டாா்.

முதல்வா் எடியூரப்பாவின் நெருங்கிய வட்டத்தில் இருந்த இருவா் பதவி விலகியிருப்பது கா்நாடக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கன்னியாகுமரி: கடலில் மூழ்கி 4 மருத்துவ மாணவர்கள் பலி

கோடை வெயிலுக்கு இடையே கனமழை: அடுத்த 2 நாள்களுக்கு!

கலங்கடிக்கும் வெடிகுண்டு மிரட்டல்: எங்கிருந்து வருகிறது மின்னஞ்சல்?

தில்லியைத் தொடர்ந்து அகமதாபாத்திலும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கலால் கொள்கை: கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

SCROLL FOR NEXT