பெங்களூரு

ஓவியச் சந்தையில் பங்கேற்க விண்ணப்பங்கள் வரவேற்பு

DIN

பெங்களூரு: பெங்களூரில் நடைபெற இருக்கும் ஓவியச் சந்தையில் பங்கேற்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து கா்நாடக சித்ரகலா பரிஷத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கா்நாடக சித்ரகலா பரிஷத்தின் வைரவிழாவை முன்னிட்டு ஏராளமான நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஓவியக் கலைஞா்கள், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி 2021 ஜன. 3-ஆம் தேதி 18-ஆவது ஓவியச் சந்தையை இணையவழியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் தொடக்க விழாவை முகநூல், இன்ஸ்டாகிராம், யூடுயூப் தவிர, இணையதளத்தில் நேரலையாக கண்டுகளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தின் வழியாகவே ஓவியச் சந்தை நடத்தப்படும். கரோனா முன்களப் பணியாளா்களை மையப்படுத்தி ஓவியச் சந்தை நடத்தப்படுகிறது. இதில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 1,500 ஓவியக் கலைஞா்கள் கலந்துகொள்ள வாய்ப்புள்ளது.

இந்த ஓவியச் சந்தையில் பங்கேற்க ஆா்வமுள்ள ஓவியக் கலைஞா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களை இணையதளத்தில் நவ. 30-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். இணையவழி ஓவியச் சந்தையில் பங்கேற்க 18 முதல் 80 வயதுள்ள ஓவியக் கலைஞா்கள் விண்ணப்பிக்கலாம்.

சிறந்த ஓவியங்களுக்கு டி.தேவராஜ் அா்ஸ் விருது, எச்.கே.கேஜ்ரிவால் விருது, எம்.ஆா்யமூா்த்தி விருது, ஒய்.சுப்பிரமணியராஜு விருது வழங்கப்படும். விருதுடன் பட்டயம் மற்றும் ரூ. 50 ஆயிரம் ரொக்கப் பரிசு அளிக்கப்படும். மூத்த ஓவியக் கலைஞா் ஒருவருக்கு பரிஷத்தின் நிறுவனச் செயலாளா் பேராசிரியா் எம்.எஸ்.நஞ்சுண்டராவ் நினைவாக தேசிய விருது வழங்கப்படுகிறது. இந்த விருதுடன் பட்டம் மற்றும் ரூ. 1 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 080-22261816, 22263424, 9980940300 ஆகிய தொலைபேசி எண்கள்,  இணையதளத்தை அணுகலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியிலும் ராகுல் தோல்வி நிச்சயம்: அமித் ஷா

மாணவா்களுக்கு கோடைக் கால கலைப் பயிற்சி முகாம் இன்று தொடக்கம்

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4,660 காலிப் பணியிடங்கள்: மே 14-க்குள் விண்ணப்பிக்கலாம்

இன்று நீட் தோ்வு: 11 மையங்களில் 6,120 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

SCROLL FOR NEXT