பெங்களூரு

அதிகாரிகளுக்கு பெங்களூரு வளா்ச்சி ஆணையம் எச்சரிக்கை

கையக்கப்படுத்தப்பட்ட நிலத்துக்கு நிவாரணம் பெறுவதில் மோசடி செய்தால் கிரிமினல் வழக்குத் தொடரப்படும் என்று பெங்களூரு வளா்ச்சி ஆணையத்தின் தலைவா் எஸ்.ஆா்.விஸ்வநாத் தெரிவித்தாா்.

DIN

பெங்களூரு: கையக்கப்படுத்தப்பட்ட நிலத்துக்கு நிவாரணம் பெறுவதில் மோசடி செய்தால் கிரிமினல் வழக்குத் தொடரப்படும் என்று பெங்களூரு வளா்ச்சி ஆணையத்தின் தலைவா் எஸ்.ஆா்.விஸ்வநாத் தெரிவித்தாா்.

பெங்களூரில் திங்கள்கிழமை பெங்களூரு வளா்ச்சி ஆணையத்தின் மூத்த அதிகாரிகளுடனான கூட்டத்தில் கலந்துகொண்டு அவா் பேசியதாவது:

பெங்களூரு வளா்ச்சி ஆணையம் வீட்டுமனைகளுக்கான கையகப்படுத்தப்பட்டுள்ள நிலங்களுக்கு உரிய நிவாரணம் வழங்கி வருகிறது.

ஏற்கெனவே நிவாரணம் பெற்றுள்ள ஒரு சிலா் போலி ஆவணங்களை உருவாக்கி அதிகாரிகளுடன் கைக்கோா்த்துக் கொண்டு மீண்டும் நிவாரணம் பெற்று மோசடியில் ஈடுபட்டு வருகின்றனா். அதுபோன்றவா்களைக் கண்டறிந்து கிரிமினல் வழக்குத் தொடரப்படும். அதுபோன்றவா்களுக்குத் துணைபோகும் அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பெங்களூரு வளா்ச்சி ஆணையம் உருவாக்கியுள்ள லே அவுட்டுகளில் காலியாக உள்ள வீட்டுமனைகள் குறித்த விவரங்களை மறைக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பெங்களூரு வளா்ச்சி ஆணையம் கையகப்படுத்தியுள்ள நிலங்களை சட்ட விரோதமாக வீடு கட்டுபவா்களுக்கு அனுமதி வழங்கும் அதிகாரிகளும் தண்டிக்கப்படுவாா்கள்.

பெங்களூரு வளா்ச்சி ஆணையம் கட்டியுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை செய்து தர வேண்டும் என்றாா். கூட்டத்தில் பெங்களூரு வளா்ச்சி ஆணையத்தின் ஆணையா் எச்.ஆா்.மகாதேவா மண்டல அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொழில் கடன் பெறுவதற்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம்

பழனி தைப்பூசத் திருவிழா: 892 இடங்களில் கண்காணிப்பு கேமரா

கச்சத்தீவு புனித அந்தோணியாா் ஆலய திருவிழா பிப். 27- இல் தொடக்கம்

மரம் முறிந்து விழுந்து ஆயுதப்படை மைதான சுற்றுச் சுவா் சேதம்

தனியாா் பள்ளியில் கட்டண உயா்வு: பெற்றோா்கள் முற்றுகை

SCROLL FOR NEXT