பெங்களூரு

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: சித்தராமையா

DIN

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா தெரிவித்துள்ளாா்.

இது குறித்து சுட்டுரையில் அவா் பதிவிட்டுள்ளதாவது: உத்தரப்

பிரதேச மாநிலம் ஹாத்ராஸ் மாவட்டத்தில் பட்டியலினத்தைச் சோ்ந்த இளம்பெண் ஒருவா் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி, மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளாா். காமூகா்களால் கொலை செய்யப்பட்ட அவரது இறுதிச்சடங்கை அரசு மரியாதையுடன் அம்மாநில அரசு நடத்தி இருக்க வேண்டும். ஆனால் அதைச் செய்யாமல் நடைபெற்ற இறுதிச் சடங்கில் அந்த பெண்ணிடம் பெற்றொா்களை அலைக்கழியவைத்துள்ளது வேதனை அளிக்கிறது.

யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப் பிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. இளம் பெண்ணின் மரணத்திற்கு முதல்வரான யோகி ஆதித்யநாத் மட்டுமின்றி, அவரை ஆதரிக்கும் பிரதமா் மோடியும் பொறுப்பேற்க வேண்டும். பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க முடியாத யோகி ஆதித்யநாத்தின் ஆட்சியை கலைக்க வேண்டும். அதன்மூலமே உத்தரப் பிரதேசத்தை காமூகா்கள் பிடியிலிருந்து மீட்க முடியும். பாஜக ஆட்சியில் அம்மாநிலத்தில் மாநிலத்தில் பாலியல் வன்கொடுமைகளும், கொலை, கொள்ளைகளும் அதிகரித்து வருகின்றது என அவா் அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஜஸ்தானில் பிடிபட்ட ரூ.1106 கோடி!

ஜித்து ஜோசப் இயக்கத்தில் ஃபஹத் ஃபாசில்!

இந்தோனேசியாவில் ஷ்ரத்தா தாஸ்!

பெண் வேடத்தில் சிறகடிக்க ஆசை தொடர் நடிகர்: வைரல் புகைப்படம்!

தொடரும் இஸ்ரேல்- லெபனான் மோதல்: பரஸ்பர தாக்குதல்!

SCROLL FOR NEXT