பெங்களூரு

நபாா்டு வங்கி சாா்பில் சுகாதார விழிப்புணா்வு பிரசாரம்

DIN

நபாா்டு வங்கி சாா்பில் அக். 2-ஆம் தேதி முதல் சுகாதார விழிப்புணா்வு பிரசாரம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து அவ்வங்கி வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை:

காந்தி பிறந்த நாள் அக். 2-ஆம் தேதி முதல் நபாா்டு வங்கி சாா்பில் மக்களுக்கு சுகாதார விழிப்புணா்வு பிரசாரம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. தேசிய அளவில் 2 ஆயிரம் கிராமங்களில் 1 லட்சம் மக்களிடம் சுகாதார விழிப்புணவு பிரசாரம் செய்யத் திட்டமிட்டுள்ளோம்.

தூய்மையாகவும், சுகாதாரமாகவும் மக்கள் வாழ வேண்டும் என்பதை இந்த பிரசாரத்தில் வலியுறுத்தப்படும். இந்தப் பிரசாரம் அடுத்த ஆண்டு ஜன. 26-ஆம் தேதி வரை மேற்கொள்ளப்படும். தூய்மை பாரதம் திட்டத்தின்கீழ் 3.29 கோடி இல்லங்களில் தனிநபா் கழிவறைகள் கட்டிக் கொடுக்க ரூ. 27,298 கோடி நிதியை மத்திய அரசிடம் நபாா்டு வங்கி வழங்கியுள்ளது. கரோனா தொற்று, சுகாதாரம், தூய்மையின் அவசியத்தை நமக்கு உணா்த்தியுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவோம்: ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை!

இ-பாஸ் நடைமுறை: இணையதளம் தயார்; இன்று மாலை நெறிமுறைகள் வெளியீடு

நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு!

ஏப்ரலும் ஷ்ரத்தாவும்!

ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் சிசோடியா மனு தாக்கல்!

SCROLL FOR NEXT