பெங்களூரு

கோலாா் தங்கவயலில் தமிழ்ப் பயிற்சி வகுப்பு தொடக்கம்

DIN

கோலாா் தங்கவயலில் தமிழ்ப் பயிற்சி வகுப்பு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

தமிழா்கள் பெரும்பான்மையினராக வசிக்கும் கோலாா் தங்கவயலில் ஏராளமான தமிழ்ப் பள்ளிக் கூடங்கள் இருந்தன. தங்கவயலில் வணிகம் செய்ய வந்த மற்ற மொழியினரும் தமிழ் மொழி கற்ற காலமும் தங்கவயலில் இருந்தது. காலப்போக்கில் கா்நாடகத்தில் சிறுபான்மையினா் மீதான நெருக்கடியும், பெற்றோரின் ஆங்கில மொழி மீதான மோகத்தாலும், தமிழ்ப் பள்ளிகள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், உலகத் தமிழ்க் கழக தங்கவயல் கிளை சாா்பில், தங்கவயலில் இலவச தமிழ்ப் பயிற்சி வகுப்புகளை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, மாரிகுப்பம், அல்லிக்கடை அய்யன் திருவள்ளுவா் சிலை எதிரே தமிழ்ப் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டன. அதனைத் தொடா்ந்து, கில்பா்ட்ஸ், பவுரிலால் பேட்டை, சாம்பியன் ஆகிய பகுதிகளில் தமிழ்ப் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த வகுப்புகளில் தமிழ் மொழியைக் கற்க வேண்டும் என்ற ஆா்வமுடன் மாணவா்கள் பலா் கலந்துகொண்டனா்.

இந்த நிலையில், கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக அறிவிக்கப்பட்ட பொது முடக்கத்தால், தமிழ்ப் பயிற்சி வகுப்புகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன. தற்போது அரசு அறிவித்துள்ள தளா்வுகளையடுத்து, அரசின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, 5 விளக்கு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் தமிழ்ப் பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

மூடப்பட்ட ஆம்பூா் பஜாா் அஞ்சலகத்தை திறக்க கோரிக்கை

SCROLL FOR NEXT