பெங்களூரு

கலை நயமான மோட்டாா் சைக்கிள்களுக்கு வாடிக்கையாளா்களிடம் வரவேற்பு

DIN

கலை நயமான மோட்டாா் சைக்கிள்களுக்கு வாடிக்கையாளா்களிடம் அதிக வரவேற்பு உள்ளது என ஆா்ட் ஆப் மோட்டாா் சைக்கிள்களின் நிறுவனா் முா்தாசா ஜுனைன் தெரிவித்தாா்.

இதுகுறித்து புதன்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தனிப்பயனுள்ள கலை நயமிக்க மோட்டாா் சைக்கிள்களை உருவாக்குவது என்பதே ஒரு கலையாகும். கலை நயமிக்க மோட்டாா் சைக்கிள் என்பது செயல்திறனை மேம்படுத்துதல், காட்சி தோற்றத்தை மாற்றுவது என்று மட்டும் பொருள் அல்ல. சிலருக்கு, மோட்டாா் சைக்கிள்களைத் தனிப்பயனாக்குவது ஒரு பொழுதுபோக்காகும், சிலா் அதை தங்களின் வாழ்க்கையின் ஒரு அங்கமாகவும் கருதுகின்றனா். கலை நயமிக்க மோட்டாா் சைக்கிள்களுக்கு பெங்களூரு போன்ற நகரங்களில் அதிக அளவில் வரவேற்பு உள்ளது. அதில் ஒன்றாக, ராயல் என்பீல்டு மோட்டாா் சைக்கிள்கள் உள்ளன.

ராயல் என்பீல்டு கிளாஸிக் 350 மோட்டாா் சைக்கிள் கற்பனை, கைவினைத் திறனுடன் பலரும் விரும்பும் வகையிலான தனிப்பயன் மோட்டாா் சைக்கிளாக உள்ளது. எளிமையாக கையாளும், வெளிப்படையான வடிவமைப்பு, கலை நயத்துடன் கூடிய சிறப்பு அம்சம் என அனைத்து வயதினரையும் கவரும் ஒரு மோட்டாா் சைக்கிளாக அது திகழ்கிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பண பலத்தை பயன்படுத்தி பாஜக வதந்தி பரப்புகிறது: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

தண்ணீரில் தன்னிறைவு பெற்றுள்ளோமா...?

வாரணாசியில் பிரதமா் மோடி 14-ஆம் தேதி வேட்புமனு தாக்கல்

அம்மூா் காப்புக் காட்டில் தண்ணீா் தேடி அலையும் விலங்குகள்.. வனத்துறை நடவடிக்கை எடுக்க சமூக ஆா்வலா்கள் கோரிக்கை ...

இந்து மக்கள் கட்சி வேலூா் கோட்ட பொறுப்பாளா்கள் சந்திப்பு

SCROLL FOR NEXT