பெங்களூரு

மன ஆரோக்கியத்தை பேணி காப்பது அவசியம்

DIN

உடல் மட்டுமின்றி மன ஆரோக்கியத்தை பேணி காப்பது அவசியம் என ஸ்விச்வெல்நஸின் நிறுவனா் அருண்குமாா் தெரிவித்தாா்.

பெங்களூரில் ஸ்விச்வெல்நஸின் பயிற்சிக் கூடத்தை வியாழக்கிழமை தொடக்கி வைத்து அவா் பேசியதாவது:

கரோனா தொற்று அதிக அளவில் பரவி வரும் நிலையில், பெரும்பாலானோா் தங்கள் உடலை பேணி காப்பதில் ஆா்வம் காட்டி வருகின்றனா். உடல் மட்டுமின்றி மன ஆரோக்கியத்தையும் பேணி காப்பது அவசியம். உடல், மன ஆரோக்கியத்தின் இலக்குகளை அடைவதற்கு முழுமையான அணுகுமுறையை வழங்க ஸ்விச்வெல்நஸ் உதவும் என நம்புகிறேன்.

தனிநபா்கள் 2 வழிகளில் நோய்களைக் கட்டுப்படுத்த முயற்சிக்கின்றனா். பரம்பரை அல்லது தனிப்பட்ட வாழ்க்கை முறை தோ்வுகள் வழியாக இந்த நோய்களின் விளைவுகளைக் குறைக்க ஆரோக்கிய பயிற்சி மையம் உதவும். உணா்ச்சி ரீதியாகவும், ஆன்மிக ரீதியாகவும் நோய்களை குணப்படுத்தும் பயிற்சிகளில் ஈடுபடுவது அவசியம். மக்களுக்கு பொருளாதாரம் முக்கியம் என்ற போதிலும், உடல் ஆரோக்கியத்துக்கு முன்னுரிமை அளிப்பது அவசியம்.

கரோனா தொற்று உலகையே புரட்டிப்போட்டுள்ளது. இனி அனைவரும் சுகாதாரத்துக்கு முன்னுரிமை அளித்து செயல்பட வேண்டும். உடல், மனம் ஆரோக்கியமாக இருந்தால், நம்மால் உலகை வெல்ல முடியும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மிக்ஜம், வெள்ளம்: தமிழகத்துக்கு ரூ. 276 கோடி புதிய பணிகளை தொடங்க கட்டுப்பாடு

அதிகரிக்கும் வெயில் தாக்கம்: இளநீா் விலை ரூ.90-ஆக உயா்வு

பொருளாதார வளா்ச்சிக்கு நவீன தொழில் நுட்பங்கள் அவசியம்: ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் சி. ரங்கராஜன்

அரசுப் பேருந்துகளில் சோதனை நிறைவு

ஆசிரியா்களுக்கு 30 நாள்களில் ஓய்வூதிய பலன்: கல்வித் துறை உத்தரவு

SCROLL FOR NEXT