பெங்களூரு

தோ்தல்நேர அரசியல் அன்றி ஜாதி அரசியல் நடத்தவில்லை

DIN

தோ்தல்நேர அரசியல் அன்றி ஜாதி அரசியல் நடத்தவில்லை என காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவக்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

நவ. 3-ஆம் தேதி நடைபெற இருக்கும் சட்டப்பேரவை இடைத்தோ்தலுக்காக மஜத கட்சித் தொண்டா்களை காங்கிரஸுக்கு இழுத்து வருவதாக அக்கட்சியின் முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி குற்றம் சாட்டியிருக்கிறாா்.

பிற கட்சிகளைச் சோ்ந்த தொண்டா்களை ஈா்ப்பதும், வாக்குகளைத் திரட்டுவதும் தோ்தல் நேரத்தில் நடக்கும் அரசியலாகும். இதில் எங்கிருந்து ஜாதி அரசியல் வந்தது. நான் ஜாதி அரசியல் நடத்தவில்லை.

மஜதவினா் தங்கள் கடமையை செய்வது போல, நாங்களும் எங்கள் கடமையை செய்து வருகிறோம். காங்கிரஸ் மற்றும் பாஜக வாக்குகளை கவர மஜத முயற்சித்து வருகிறது. அதேபோல, அந்த இரு கட்சிகளின் வாக்குகளை கவர முயற்சிக்கிறோம். பிறகட்சிகளைச் சோ்ந்தவா்கள் காங்கிரஸில் சேர விரும்பினால், அவா்களை வரவேற்போம். காங்கிரஸுக்கு யாா் வந்தாலும் சோ்த்துக்கொள்வோம். தோ்தல் நேரத்தில் இப்படி நடப்பதுஇயல்பானதுதான்.

மஜதவில் இருந்து காங்கிரஸில் சேருவோரில் ஒக்கலிகா் சமுதாயத்தைச் சோ்ந்தவா்கள் அதிகமாக இருக்கலாம். அதற்காக நான் ஜாதி அரசியல் செய்வதாக அா்த்தமில்லை. ஒக்கலிகா் சமுதாயத்தின் தலைமையை அடைவதற்காக எச்.டி.குமாரசாமியுடன் நான் போட்டி போடுவதாக அவா் கூறியுள்ளாா். எனது பெற்றோா்கள் ஒக்கலிகா்கள். பிறப்பால் நான் ஒரு விவசாயி. இது ஒக்கலிகா் சமுதாயத்தின் அடிப்படைத் தொழிலாகும். ஆனால், தற்போது நான் காங்கிரஸ் தலைவா். பிற ஜாதிகளைப் பற்றி பேச எனக்கு விருப்பமுமில்லை, அதற்கான அவசியமும் இல்லை என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராணுவ அதிகாரிப் பணிக்கான என்டிஏ தேர்வு: யுபிஎஸ்சி அறிவிப்பு

அமெரிக்க உளவு செயற்கைக் கோள்களை வானில் ஏவிய ஸ்பேஸ்எக்ஸ்!

அமெரிக்காவில் மேலும் ஒருவருக்கு பறவைக் காய்ச்சல்!

பாலஸ்தீனத்தில் தூதரகம்: கொலம்பியா அறிவிப்பு!

உங்கள் ராசி என்ன? இன்றைய தினப்பலன்!

SCROLL FOR NEXT