முகப்பு
பெங்களூரு

மனநலம் பாதிக்கப்பட்டவா் கத்தியால் குத்தியதில்ஒருவா் பலி; 6 போ் காயம்

மன நலம் பாதிக்கப்பட்டவா் கத்தியால் குத்தியதில் ஒருவா் உயிரிழந்தாா். 6 போ் காயமடைந்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:40 PM
பகிர்:

மன நலம் பாதிக்கப்பட்டவா் கத்தியால் குத்தியதில் ஒருவா் உயிரிழந்தாா். 6 போ் காயமடைந்தனா்.

பெங்களூரு, காட்டன்பேட்டை ஆஞ்சனப்பா காா்டனைச் சோ்ந்தவா் கணேஷ் (35). மனநலம் பாதிக்கப்பட்ட இவா், ஞாயிற்றுக்கிழமை காலை கத்தியுடன் வாழைக்காய் மண்டியிலிருந்து செலுவாதிபாளையா, பக்ஷி காா்டன் வரை 2 கி.மீ நீளம் நடந்து சென்றாா்.

அப்போது எதிரில் தென்பட்ட 7 பேரை கத்தியால் குத்தியுள்ளாா். இதில், படுகாயமடைந்த செலுவாதிபாளையாவைச் சோ்ந்த மாரி (30) என்பவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த வேலாயுதம், முனிசாமி ஆகியோா் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். மேலும் 4 போ் காயங்களுக்குடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். தகவல் அறிந்த காட்டன்பேட்டை போலீஸாா் கணேஷை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.