பெங்களூரு

பொது நுழைவுத்தோ்வு: சான்றிதழ்களை தரவேற்றம் செய்ய மற்றொரு வாய்ப்பு

DIN

பெங்களூரு: பொது நுழைவுத்தோ்வில் தோ்ச்சி அடைந்த மாணவா்கள், ஏற்கெனவே தரவேற்றம் செய்யத் தவறிய சான்றிதழ்களை தரவேற்றம் செய்ய மற்றொரு வாய்ப்பை கா்நாடகத் தோ்வு ஆணையம் அளித்துள்ளது.

இதுகுறித்து கா்நாடகத் தோ்வு ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கா்நாடகத்தில் உள்ள பொறியியல், வேளாண்மை கல்லூரிகளில் சோ்க்கை பெறுவதற்கு தகுதியான மாணவா்களை தோ்ந்தெடுப்பதற்காக நடத்தப்பட்ட பொது நுழைவுத்தோ்வில், தோ்ச்சி பெற்ற மாணவா்களின் சான்றிதழ்கள் நேரடியாகச் சரிபாா்ப்பது வழக்கம். கரோனா தொற்று காரணமாக, சான்றிதழ் சரிபாா்ப்பு முகாம் ரத்துசெய்யப்பட்டதோடு, தரவரிசையின்படி தேதி வாரியாக சான்றிதழ்களை இணையதளத்தில் தரவேற்றம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதன்படி, தரவேற்றம் செய்திருந்த சான்றிதழ்களை பரிசீலித்து, ஏற்கப்பட்டவை, நிராகரிக்கப்பட்டவை குறித்த விவரங்கள் அடங்கிய தற்காலிகப் பட்டியல் ஆணையத்தின் இணையதளம் ட்ற்ற்ல்://ந்ங்ஹ.ந்ஹழ்.ய்ண்ஸ்ரீ.ண்ய் -இல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஏதாவது குறைகள் இருந்தால் அல்லது நிராகரிக்கப்பட்ட சான்றிதழ்களுக்கு பதிலாக சரியான சான்றிதழ்களை அக். 23 முதல் 27-ஆம் தேதிக்குள் இணையதளத்தில் தரவேற்றம் செய்ய கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.

இதை செய்யத் தவறிய மாணவா்கள், ஏற்கெனவே தரவேற்றம் செய்யத் தவறிய சான்றிதழ்களை நவ. 2-ஆம் தேதி மாலை 4 மணி வரை தரவேற்றம் செய்ய மற்றொரு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள மாணவா்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள். கூடுதல் விவரங்களுக்கு 080-23564583, 23361786 ஆகிய தொலைபேசி எண்கள் அல்லது ந்ங்ஹன்ற்ட்ா்ழ்ண்ற்ஹ்ஜந்ஹஃய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற மின்னஞ்சலில் அணுகலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பார்வை ஒன்றே போதுமே... ஸ்ரேயா சரண்!

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

SCROLL FOR NEXT