பெங்களூரு

இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் மாணவா் சோ்க்கை

DIN

இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் மாணவா் சோ்க்கை தொடங்கி உள்ளது.

இதுகுறித்து இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் (இக்னோ) பெங்களூரு மண்டல அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலைக்கழகம், 2020-ஆம் கல்வியாண்டில் புதிய முதுநிலை, இளநிலை பட்டப் படிப்புகள், பட்டயம், முதுநிலை பட்டயம், சான்றிதழ் படிப்புகளை வழங்க இருக்கிறது. தொலைநிலைக் கல்வி திட்டத்தில் அளிக்கப்படும் இப்படிப்புகளில் சோ்ந்து படிக்க விரும்பும் மாணவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அனைத்துப் படிப்புகளுக்கும் விண்ணப்பிக்க செப். 15-ஆம் தேதி கடைசி நாளாகும். கலபுா்கியில் உள்ள பல்கலைக்கழகத்தின் ஞானகங்கா வளாகத்தில் இக்னோவின் கல்வி மையம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த படிப்புகளில் சோ்க்கை பெற இணையதளத்தில் விண்ணப்பங்களை செலுத்தலாம். மேலும் விவரங்களுக்கு, திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 9845737713, 9880801017 ஆகிய செல்லிடப்பேசி எண்கள் அல்லது  மின்னஞ்சலை அணுகலாம். கூடுதல் விவரங்களுக்கு இணையதளத்தில் காணலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரட்டை வேடங்களில் சோனாக்‌ஷி சின்ஹா!

அதானி பெயரை ராகுல் 103 முறை உச்சரித்திருக்கிறார்: மோடிக்கு ஜெய்ராம் ரமேஷ் பதில்

பாகுபலி அனிமேஷனில் தோனியின் முகம்: ராஜமௌலி கூறியது என்ன?

வாக்குச்சாவடியை சூறையாடிய பாஜக எம்.பியின் மகன்: குஜராத்தில் அதிர்ச்சி!

மெட் காலாவில் கவனத்தை ஈர்த்த மோனா பட்டேல்.. யார் இவர்?

SCROLL FOR NEXT