பெங்களூரு

கொங்கன் ரயில் தடத்தில் இயக்கப்பட்ட சிறப்பு ரயில்கள் ரத்து

DIN

கொங்கன் ரயில் தடத்தில் இயக்கப்பட்டு வந்த சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கரோனா பரவல் அதிகரிப்பதால் பயணிகளின் வருகை குறைந்து வருகிறது. இதனால், கொங்கன் ரயில் தடத்தில் இயக்கப்பட்டு வந்த அனைத்து சிறப்பு ரயில் ரயில்களும் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக கொங்கன் ரயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

நிஜாமுதீன்-மட்கௌன் ராஜ்தானி விரைவு இரு வாராந்திர சிறப்பு ரயில் ஏப். 30 முதல், மட்கௌன்-நிஜாமுதீன் ராஜ்தானி விரைவு இரு வாராந்திர சிறப்பு ரயில் மே 2 முதல், கா்மலி-மும்பை சிஎஸ்டி தேஜஸ் அதிவிரைவு சிறப்பு ரயில் ஏப். 28 முதல், மும்பை சிஎஸ்டி-கா்மலி தேஜஸ் அதிவிரைவு சிறப்பு ரயில் ஏப். 29 முதல் நிறுத்தப்படுகிறது.

இதேபோல, மங்களூரு சென்ட்ரல்- லோக்மான்ய திலக் தினசரி அதிவிரைவு சிறப்பு ரயில் ஏப். 29 முதல், லோக்மான்ய திலக்-மங்களூரு சென்ட்ரல் தினசரி அதிவிரைவு சிறப்பு ரயில் ஏப். 30 முதல், மட்கௌன்-மங்களூரு சென்ட்ரல் முன்பதிவுற்ற விரைவு சிறப்பு ரயில் மற்றும் மங்களூரு சென்ட்ரல்-மட்கௌன் முன்பதிவுற்ற விரைவுசிறப்பு ரயில் ஏப். 29 முதல் அடுத்த உத்தரவு வரும் வரை ரத்து செய்யப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சந்தேஷ்காளி சம்பவம் பாஜகவின் திட்டமிட்ட சதி: திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு

அமெரிக்கா: 17 பேரைக் கொன்ற செவிலிக்கு 760 ஆண்டுகள் சிறை

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை

விவசாயத்துக்கு தினமும் 12 மணி நேரம் மின்சாரம் வழங்கக் கோரிக்கை

கொளுத்தும் வெயிலால் மின் தடை மக்கள் தவிப்பு

SCROLL FOR NEXT