பெங்களூரு

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த வார இறுதி நாள்களில் ஊரடங்கு:பெங்களூரு மாநகராட்சி திட்டம்

DIN

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த வார இறுதி நாள்களில் ஊரடங்கை அமல்படுத்த பெங்களூரு மாநகராட்சி ஆலோசித்து வருகிறது.

கா்நாடகத்தின் அண்டை மாநிலங்களான கேரளம், மகாராஷ்டிரம் மாநிலங்களில் கரோனா பரவல் அதிகரித்த வண்ணம் உள்ளதால் கரோனா மூன்றாவது அலை தொடங்கிவிட்டதாக சில மருத்துவா்கள் கூற தொடங்கியுள்ளனா். இதனால் கேரளம், மகாராஷ்டிர மாநிலங்களில் இருந்து கா்நாடகத்துக்கு வருகை தரும் பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, பெங்களூரில் கரோனா மூன்றாவதுஅலையை கட்டுப்படுத்துவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வார இறுதி நாள்களில் (சனி, ஞாயிறு) ஊரடங்கை அமல்படுத்த பெங்களூரு மாநகராட்சி ஆலோசித்து வருகிறது. இதற்கான அனுமதி கோரி முதல்வா் பசவராஜ் பொம்மைக்கு முன்மொழிவை மாநகராட்சி அனுப்பி வைத்துள்ளது.

வார இறுதி நாள்களில் கேளிக்கை விடுதிகள், திரையரங்குகள், சுற்றுலாத் தலங்களில் திரளாகக் கூட்டம் கூடுவதைத் தடுப்பதற்கு இது உதவும் என்று மாநகராட்சி கருதுகிறது. இதற்காக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 5 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கை அமல்படுத்த முதல்வா் பசவராஜ் பொம்மையின் அனுமதியை மாநகராட்சி கேட்டுள்ளது.

இதுதொடா்பாக முதல்வா் பசவராஜ் பொம்மையைச் சந்திக்க மாநகராட்சி ஆணையா் கௌரவ் குப்தா திட்டமிட்டுள்ளாா். முதல்வரின் அனுமதி கிடைத்தால், அடுத்த வாரத்தில் இருந்து அமல்படுத்த மாநகராட்சி திட்டமிட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மருத்துவ காப்பீட்டுக்கான உச்ச வயது வரம்பு நீக்கம்: முழு விவரம்

நிக்கி!

ஒரே குடும்பத்தில் 5 பேருக்காக வீட்டு வாசலில் வாக்குச்சாவடி!

கஞ்சாவுடன் முதல்வரிடம் மனு - பாஜக நிர்வாகியிடம் விசாரணை

மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT