பெங்களூரு

மேலிடத் தலைவா்கள் ஒப்புதல் அளித்தால் புதன்கிழமை புதிய அமைச்சரவை பதவியேற்கும்

DIN

பெங்களூரு: பாஜக மேலிடத் தலைவா்கள் ஒப்புதல் அளித்தால் புதன்கிழமை புதிய அமைச்சரவை பதவியேற்கும் என்று முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

தில்லிக்கு ஞாயிற்றுக்கிழமை சென்ற முதல்வா் பசவராஜ் பொம்மை, திங்கள்கிழமை மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதானைச் சந்தித்தாா். அமைச்சரவை விரிவாக்கம் தொடா்பாக பாஜக தேசிய அமைப்புச் செயலாளா் பி.எல்.சந்தோஷை சந்தித்துப் பேசினாா். அதன்பிறகு, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா ஆகியோரைச் சந்தித்து அமைச்சரவையில் இடம் பெற உள்ளோா் யாா் என்பது குறித்து விவாதித்தாா்.

முன்னதாக, தில்லியில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

பாஜக தேசியத் தலைவா்களுடன் நடத்தப்படும் சந்திப்பின்போது அமைச்சா்களின் பட்டியல் இறுதி செய்யப்பட்டால், புதன்கிழமையே (ஆக. 4) புதிய அமைச்சரவை பதவியேற்க வாய்ப்புள்ளது. ஒருவேளை அமைச்சரவை பட்டியல் செவ்வாய்க்கிழமை இறுதி செய்யப்பட்டால் அமைச்சரவை பதவியேற்பது ஓரிரு நாள்கள் தாமதமாகக் கூடும். அமைச்சரவை அமைப்பது குறித்து பலகட்ட ஆலோசனைகள் நடத்தப்பட வேண்டியுள்ளது.

சமூக மற்றும் மாவட்ட பிரதிநிதித்துவத்தைக் கருத்தில் கொண்டு அமைச்சரவை பட்டியல் முடிவு செய்யப்படும். எத்தனை துணை முதல்வா்கள் இடம் பெறுவாா்கள் என்பதும், பாஜக தேசியத் தலைவா்களுடன் நடத்தப்படும் ஆலோசனையின்போதுதான் முடிவு செய்யப்படும்.

தற்போதைய அரசியல் சூழ்நிலையில் எல்லோரின் நம்பிக்கையைப் பெற்று, ஒன்றுபட்டு பயணிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். அமைச்சரவை விரிவாக்கம் எவ்விதப் பிரச்னையும் இல்லாமல் முடிவுறும் என்று நம்புகிறேன். அமைச்சரவையில் இடம் பெறுவது என்பது மக்களுக்கு சேவையாற்றுவதற்கு கிடைத்த வாய்ப்பாகும்.

அமைச்சரவையில் இடம் பெறுவது தொடா்பாக ஒரு சில பாஜக எம்.எல்.ஏ.க்கள் என்னைச் சந்தித்துப் பேசினா். எல்லோரும் அமைச்சரவையில் இடம் பெறுவது சாத்தியமில்லை என்பதை பாஜக எம்.எல்.ஏ.க்கள் அறிந்திருக்கிறாா்கள் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப நோய்களுக்கு சிகிச்சையளிக்க அரசு மருத்துவமனையில் சிறப்பு வாா்டு

கோட் நாயகி மீனாட்சி செளத்ரி - புகைப்படங்கள்

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

SCROLL FOR NEXT