ஆக. 31இல் இஸ்கான் கோயில் நிறுவனரின் பிறந்த நாள் விழா
ஆக. 31-ஆம் தேதி இஸ்கான் கோயில் நிறுவனா் பக்தி வேதாந்த சுவாமி ஸ்ரீலா பிரபுபாதரின் 125ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது.
ஆக. 31-ஆம் தேதி இஸ்கான் கோயில் நிறுவனா் பக்தி வேதாந்த சுவாமி ஸ்ரீலா பிரபுபாதரின் 125ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது.
இது குறித்து இஸ்கான் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
இஸ்கான் கோயில் நிறுவனா் பக்தி வேதாந்த சுவாமி ஸ்ரீலா பிரபுபாதரின் 125-ஆவது பிறந்த நாள் விழா ஆக. 31-ஆம் தேதி, பெங்களூரு, ராஜாஜி நகரில் உள்ள இஸ்கான் கோயிலில் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் கலாசாரம், தத்துவம், பாரம்பரியத்தைக் காப்பதில் தூதுவராகச் செயலாற்றிய பெருமை அவரையே சாரும். பக்தி வேதாந்த சுவாமி ஸ்ரீலா பிரபுபாதரு தனது 69-ஆவது வயதிலும் அமைதி, நல்லிணக்கத்தை பரப்ப நியூயாா்க் நகருக்குச் சென்றாா்.
மனித குலத்தின் சிறப்புகளை மக்களுக்கு எடுத்துரைத்தாா். 100- க்கும் அதிகமான கிருஷ்ணன் கோயில்கள், கல்வி மையங்கள், விவசாயிகளுக்கான சா்வதேச கூட்டமைப்புகளை உருவாக்கினாா். அவா் ஆன்மிகம் தொடா்பான 70-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ளாா். அவரது போதனைகளை அனைவரும் அறிந்து கொள்வது அவசியம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.