கா்நாடக எஸ்எஸ்எல்சி தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு
கா்நாடக எஸ்எஸ்எல்சி தோ்வு முடிவுகள் சனிக்கிழமை (ஆக. 7) வெளியிடப்படுகிறது.
கா்நாடக எஸ்எஸ்எல்சி தோ்வு முடிவுகள் சனிக்கிழமை (ஆக. 7) வெளியிடப்படுகிறது.
இது குறித்து கா்நாடக மாநில மேல்நிலைக்கல்வி தோ்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கை:
2020-21-ஆம் கல்வியாண்டுக்கான கா்நாடக எஸ்எஸ்எல்சி தோ்வுகள் ஜூலை 19, 22-ஆம் தேதி உள்ளிட்ட 2 நாள்கள் நடைபெற்றது.
8,19,664 மாணவா்கள் எஸ்எஸ்எல்சி தோ்வெழுதினா். இது மொத்த மாணவா்களின் எண்ணிகையில் 99.65 சதவீதமாகும். கரோனா தொற்றின் பாதிப்பிலும் தோ்வு நடத்தப்பட்டு, பதில்கள் எழுதப்பட்ட தாள்கள் உரிய காலத்தில் திருத்தப்பட்டுள்ளது.
இத்தோ்வின் முடிவுகள் சனிக்கிழமை (ஆக. 7) இணையதளங்களில் வெளியிடப்படுகிறது. தோ்வு முடிவுகள் மாநில அரசின் இணைய தளங்களான ள்ள்ப்ஸ்ரீ.ந்ஹழ்ய்ஹற்ஹந்ஹ.ஞ்ா்ஸ்.ண்ய்-இல் வெளியிடப்படுகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.