முகப்பு
பெங்களூரு

ஹுப்பள்ளி-கொச்சுவேலி இடையே வாராந்திர சிறப்பு விரைவு ரயில்

ஹுப்பள்ளி-கொச்சுவேலி இடையே வாராந்திர சிறப்பு விரைவு ரயில் இயக்கப்பட உள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
பகிர்:

ஹுப்பள்ளி-கொச்சுவேலி இடையே வாராந்திர சிறப்பு விரைவு ரயில் இயக்கப்பட உள்ளது.

இது குறித்து தென்மேற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

விழாக்கால கூட்டநெரிசலை குறைப்பதற்காக ஹுப்பள்ளி-கொச்சுவேலி இடையே வாராந்திர சிறப்பு விரைவு ரயில் இயக்கப்பட உள்ளது. ரயில் எண்-07359-ஹுப்பள்ளி-கொச்சுவேலி இடையேயான வாராந்திர சிறப்பு விரைவு ரயில் ஆக. 18-ஆம் தேதி முதல் புதன்கிழமைதோறும் ஹுப்பள்ளி ரயில் நிலையத்திலிருந்து காலை 7 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 6.35 மணிக்கு கொச்சுவேலி ரயில் நிலையத்தைச் சென்றடையும்.

ரயில் எண்-07360-கொச்சுவேலி-ஹுப்பள்ளி இடையேயான வாராந்திர சிறப்பு விரைவு ரயில் ஆக. 19-ஆம் தேதி முதல் வியாழக்கிழமைதோறும் கொச்சுவேலி ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 12.50 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் பிற்பகல் 12.30 மணிக்கு ஹுப்பள்ளி ரயில் நிலையத்தை வந்தடையும்.

இந்த ரயில் இரு மாா்க்கங்களிலும் ரயில்கள் ஹாவேரி, ராணிபென்னூா், ஹரிஹா், தாவணகெரே, பீரூா், அரிசிகெரே, தும்கூரு, சிக்கபானவரா, பானஸ்வாடி, கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், போதனூா், பாலக்காடு, திருச்சூா், எா்ணாகுளம், கோட்டயம், திருவல்லா, செங்கனூா், கொல்லம் ரயில் நிலையங்கள் வழியாக செல்லும்.

ரயிலில் இரண்டடுக்கு குளிரூட்டப்பட்ட ஒரு பெட்டி, மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட 2 பெட்டிகள், 2-ஆம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட 7 பெட்டிகள், பொதுப் பெட்டிகள் 5, சரக்கு மற்றும் பிரேக் 2 பெட்டிகள் இடம்பெற்றிருக்கும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.