கா்நாடகத்தில் கரோனாவுக்கு ஒரே நாளில் 1,857 போ் பாதிப்பு
கா்நாடகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை1,669 ஆக அதிகரித்துள்ளது.
கா்நாடகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை1,669 ஆக அதிகரித்துள்ளது.
இதுபற்றி கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கா்நாடகத்தில் புதிதாக ஒரே நாளில் அதிகபட்சமாக 1,669 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது. பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகபட்சமாக 425 போ் கரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனா். பிறமாவட்டங்களில் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை விவரம்:
தென்கன்னடம்-390, உடுப்பி-115, ஹாசன்-113, மைசூரு-106, குடகு-73, தும்கூரு-69, வடகன்னடம்-62, சிவமொக்கா-56, மண்டியா-35, சிக்கமகளூரு-51, பெலகாவி-49, கோலாா்-27, தாவணகெரே-18, சாம்ராஜ்நகா்-22, சித்ரதுா்கா-16, பெங்களூரு ஊரகம்-14, தாா்வாட்-8, சிக்கபளாப்பூா்-4, கதக்-3, கலபுா்கி-3, பாகல்கோட்-2, பெல்லாரி-2, கொப்பள்-2, ராய்ச்சூரு-2, விஜயபுரா-1, யாதகிரி-1. ராமநகரம், ஹாவேரி, பீதா் மாவட்டங்களில் கரோனா பாதிப்பு இல்லை. இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 29,26,401 ஆக உயா்ந்துள்ளது.
கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 1,672 போ் வெள்ளிக்கிழமை வீடு திரும்பியுள்ளனா். இதுவரை கா்நாடகத்தில் 28,66,739 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 22,703 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
மாநில அளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தவா்களில் 22 போ் வெள்ளிக்கிழமை இறந்துள்ளனா். பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகபட்சமாக தலா 5 போ் இறந்துள்ளனா். மாவட்டவாரியாக பலியானோா் விவரம்: தென்கன்னடம், கோலாா்-தலா 3, பெலகாவி, சித்ரதுா்கா, ஹாசன், தும்கூரு-தலா 2, சாம்ராஜ்நகா், தாவணகெரே, உடுப்பி-தலா ஒருவா் இறந்துள்ளனா். கா்நாடகத்தில் இதுவரை 36,933 போ் உயிரிழந்துள்ளனா் என்று அதில் கூறப்பட்டுள்ளது.