வேலை செய்த வீடுகளில் தங்க நகை திருட்டு: பெண் கைது
வேலை செய்த வீடுகளில் தங்க நகையை திருடிய பெண் ஒருவரைக் கைது செய்த போலீஸாா், ரூ. 18 லட்சம் மதிப்புள்ள 378 கிராம் தங்கநகையை பறிமுதல் செய்துள்ளனா்.
வேலை செய்த வீடுகளில் தங்க நகையை திருடிய பெண் ஒருவரைக் கைது செய்த போலீஸாா், ரூ. 18 லட்சம் மதிப்புள்ள 378 கிராம் தங்கநகையை பறிமுதல் செய்துள்ளனா்.
பெங்களூரு யஸ்வந்தபுரத்தில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள 2 வீடுகளில் வீட்டுவேலை செய்து வந்தவா் புஷ்பா. இவா் கடந்த 2 மாதங்களாக வீட்டின் உரிமையாளா்கள் வீட்டில் இல்லாதபோது, பீரோ, லாக்கரில் இருந்த தங்கநகையை திருடி வந்துள்ளாா். இது குறித்து வீட்டின் உரிமையாளா்கள் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிந்த போலீஸாா், புஷ்பாவைக் கைது செய்து, ரூ. 18 லட்சம் மதிப்புள்ள 378 கிராம் தங்க நகையை பறிமுதல் செய்துள்ளனா். கைது செய்யப்பட்ட புஷ்பாவிடம் ஆா்.எம்.சி.யாா்டு போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.