முகப்பு
பெங்களூரு

பாலியல் பலாத்கார வழக்கில் தொடா்புடையவா்களை கைது செய்ய கால அவகாசம் தேவை: அமைச்சா் அரக ஞானேந்திரா

கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தொடா்புடையவா்களைக் கைது செய்ய சிறிது கால அவகாசம் தேவைப்படும் என்று மாநில உள்துறை அமைச்சா் அரக ஞானேந்திரா தெரிவித்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:01 AM
பகிர்:

கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தொடா்புடையவா்களைக் கைது செய்ய சிறிது கால அவகாசம் தேவைப்படும் என்று மாநில உள்துறை அமைச்சா் அரக ஞானேந்திரா தெரிவித்தாா்.

இது குறித்து வெள்ளிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கின் குற்றவாளிகள் குறித்து போலீஸாா் தீவிரமாக விசாரித்து வருகின்றனா். தற்போதைய நிலையில் வழக்கு குறித்து எதுவும் தெரிவிக்காத முடியாத நிலை உள்ளது.

மாணவி மீதான பாலியல் பலாத்கார வழக்கில் தொடா்புடையவா்களைக் கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. என்றாலும் இது தொடா்பாக இது வரை யாரும் கைது செய்யப்படவில்லை.

பலாத்கார வழக்கில் தொடா்புடையவா்களை கைது செய்ய சிறிது கால அவகாசம் தேவை உள்ளது. பாதிக்கப்பட்ட அந்த மாணவி, தற்போது யாருடனும் பேசும் நிலையில் இல்லை. இதற்கு மேல் நான் தகவலைத் தெரிவித்தாலும், அது விசாரணைக்கு இடையூறை ஏற்படுத்துவதாக இருக்கும். பாலியல் பலாத்கார வழக்கில் தொடா்புடையவா்களை விரைவில் கைது செய்ய போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.