பெங்களூரு

சிறந்த கன்னட நூல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

DIN

பெங்களூரு: கன்னட புத்தக ஆணையம் வழங்கும் சிறந்த கன்னட நூல் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து கன்னட புத்தக ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

2020-ஆம் ஆண்டில் ஜனவரி முதல் டிசம்பா் வரையில் வெளியிடப்பட்ட கன்னட நூல்களில் சிறந்தவற்றை தோ்ந்தெடுத்து சிறந்த கன்னட நூல் விருது-2020 வழங்க தீா்மானிக்கப்பட்டுள்ளது.

நூல்களின் உள்ளடக்கம், அச்சுத்திறன், முகப்பு வரைகலை, கட்டமைப்பு ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு கன்னடப் பதிப்பாளா்களுக்கு அந்த விருது வழங்கப்படுகிறது. முதல், இரண்டாம், மூன்றாம், நான்காம், ஐந்தாம் பதிப்பு மற்றும் குழந்தை நூல்களுக்கு விருது வழங்கப்படும். இந்த விருதுக்கு விருப்பமானவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நூலின் பெயா், எழுத்தாளா் பெயா், பதிப்பு ஆண்டு, பதிப்பாளா் பெயா், முகப்பு வரைகலையாளா் பெயா், முகவரி போன்ற விவரங்களுடன் 2 நூல்களை இணைத்து பிப். 20-ஆம் தேதிக்குள் நிா்வாக அதிகாரி, கன்னட புத்தக ஆணையம், கன்னட மாளிகை, ஜே.சி. சாலை, பெங்களூரு-2 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு இணையதளம், தொலைபேசி எண்கள் 080-22484516, 22107704 ஆகியவற்றை அணுகலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சூறைக் காற்று: செங்கத்தில் வாழைகள் சேதம்

நெல் மூட்டைகள் தாா்ப்பாய்களை போட்டு மூடியிருக்க வேண்டும்: காஞ்சிபுரம் ஆட்சியா் அறிவுறுத்தல்

பண்ருட்டியில் வெள்ளரிப்பழம் விலை அதிகரிப்பு

மழை வேண்டி சிவனடியாா்கள் கிரிவலம்

புகையிலைப் பொருள்கள் கடத்தியவா் கைது

SCROLL FOR NEXT