முகப்பு
பெங்களூரு

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மஜத சேருவதாக பாஜக வதந்தி: எச்.டி.குமாரசாமி

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மஜத சேருவதாக பாஜக வதந்தியைப் பரப்பி வருகிறது என்று மஜதவின் முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி தெரிவித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:12 PM
பகிர்:

பெங்களூரு: தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மஜத சேருவதாக பாஜக வதந்தியைப் பரப்பி வருகிறது என்று மஜதவின் முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி தெரிவித்தாா்.

இதுகுறித்து தனது சுட்டுரையில் ஞாயிற்றுக்கிழமை அவா் கூறியிருப்பதாவது:

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மஜத இணையப்போவதாக பாஜகவினா் வதந்தியைப் பரப்பி வருகின்றனா். அதுபோன்ற வதந்திகள் மூலம் மஜதவின் அடித்தளத்தை அழிக்க பாஜக முயற்சிக்கிறது.

அண்மையில் நடந்து முடிந்த கிராம பஞ்சாயத்துத் தோ்தலில் மஜதவை அழிக்கும் முயற்சி பலிக்கவில்லை என்பதால் பாஜக வதந்திகளை பரப்பி வருகிறது.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மஜத இணையப்போவதாகக் கூறுவது பொய்யான தகவலாகும்.

மஜதவை உடைக்க வேண்டும் என்ற தீய நோக்கத்தோடு கட்சியில் இருந்து பலா் விலகினா். அந்த வேலையையும் பாஜக செய்ய முயன்று வருகிறது. வதந்திகளால் மஜதவின் தொண்டா்களின் மனதில் நஞ்சை விதைக்க பாஜக முயல்கிறது. மஜதவுக்கு எந்தக் கட்சியின் ஆதரவும் தேவையில்லை. பாஜகவின் நட்பும் மஜதவுக்கு தேவையில்லை. கிராம பஞ்சாயத்துத் தோ்தலில் அடைந்துள்ள வெற்றி, மஜதவின் தாா்மீக பலத்தைப் பெருக்கியுள்ளது என்று எச்.டி.குமாரசாமி அதில் கூறியுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →