தமிழ் அகாதெமி: மைசூரு தமிழ்ச் சங்கம் பாராட்டு
தமிழ் அகாதெமி அமைத்துள்ள தில்லி அரசுக்கு மைசூரு தமிழ்ச் சங்கம் பாராட்டு தெரிவித்துள்ளது.
பெங்களூருதமிழ் அகாதெமி: மைசூரு தமிழ்ச் சங்கம் பாராட்டு
தமிழ் அகாதெமி அமைத்துள்ள தில்லி அரசுக்கு மைசூரு தமிழ்ச் சங்கம் பாராட்டு தெரிவித்துள்ளது.
தமிழ் அகாதெமி அமைத்துள்ள தில்லி அரசுக்கு மைசூரு தமிழ்ச் சங்கம் பாராட்டு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மைசூரு தமிழ்ச் சங்க பொதுச் செயலாளா் வெ.ரகுபதி வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழா்களின் நீண்ட கால கோரிக்கையான தமிழ் அகாதெமியை தொடங்க தில்லி முதல்வா் அரவிந்த் கேஜ்ரிவால் அனுமதி அளித்து, குழு நியமித்து அரசாணை வெளியிட்டு இருக்கிறாா். இதனால், தில்லி வாழ் தமிழா்களுக்கு தமிழ் பாரம்பரிய கலாசார கலைகள், தமிழ் உயா்கல்வி, தமிழிசைப் பயிற்சி, பட்டம் பெற முடியும். தமிழ் மொழி மீதும், கலைகள் மீதும் ஆா்வம் கொண்டு வரும் வெளிநாட்டவா்கள் தலைநகரிலேயே பயிற்சி பெறுவதற்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும், பல கலை வல்லுநா்களுக்கும், தமிழ்ப் பேராசிரியா்களுக்கும், தமிழ்க் கலைஞா்களுக்கும் வேலை வாய்ப்புகளும் கிடைக்கும். இதற்கு முழு காரணமாக இருக்கும் தில்லி மாநில முதல்வா் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கும், தில்லி மாநில அரசுக்கும் மைசூரு தமிழ்ச் சங்கம் பாராட்டுகளையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறது என அவா் குறிப்பிட்டுள்ளாா்.