அமேசான் தரவு மையத்தில் ஈரான் ஏவுகணைத் தாக்குதல்! வங்கி, டிஜிட்டல் சேவைகள் கடும் பாதிப்பு!
அமேசான் தரவு மையத்தில் ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலால் வங்கி சேவைகள் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளதைப் பற்றி...
அமேசான் தரவு மையத்தில் ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலால் வங்கி சேவைகள் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளன.
கடந்த ஐந்து நாள்களாகவே மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ப் பதற்றம் உலகளவில் பரபரப்பான சூழலை உருவாக்கியுள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் ராணுவத்தின் நடத்திய அதிரடித் தாக்குதலில் ஈரானின் உச்சத்தலைவர் மதகுரு அலி அயத்துல்லா கமேனி, ராணுவத் தளபதி உள்பட 45-க்கும் மேற்பட்ட தலைவர்கள் கொல்லப்பட்டதன் விளைவாக அமெரிக்காவுக்கு ராணுவ உதவிகளை மேற்கொண்ட ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது ஈரான் கடுமையான தாக்குதலைத் தொடர்ந்தது.
Advertisement
Advertisement
இந்தத் தாக்குதலில் சௌதியின் ரியாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம், வணிக வளாகங்கள், ஹோட்டல்கள் மீதும் ஈரான் ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை வீசித் தாக்குதல் நடத்தியது.
பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படையின் தலைமையகம், மத்திய கிழக்கின் மிகப் பெரிய அமெரிக்க தளம் அமைந்துள்ள கத்தாரின் அல்- உதெயித் விமானப் படைத் தளம், குவைத்தில் உள்ள அலி அல்-சலெம் படைத் தளம், சௌதி அரேபியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் உள்ளிட்ட இடங்களின் மீது ஈரான் படைகள் தாக்குதல் நடத்தின.
இதில், ஈரானின் நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை இடைமறித்து தகர்த்துள்ளதாக, அமீரகம், கத்தார், சௌதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் தெரிவித்துள்ளன. மேலும், சுமார் 100-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்ததுடன், ஐக்கிய அரபு அமீரகத்தில் 3 பேர் பலியாகினர்.
இந்தத் தாக்குதலில் அமீரகத்தில் உள்ள அமேசானின் தரவுகள் மையமும் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்திருக்கிறது.
அமேசான் வலைதள சேவைகளின் தரவு மையங்களில் ஈரான் நடத்திய டிரோன் தாக்குதல்களைத் தொடர்ந்து, அங்கு உள்ள வங்கி சேவைகள் மற்றும் டிஜிட்டல் சேவைகள் செயலிழந்தன.
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இரண்டு தரவு மையங்களும் , பஹ்ரைனில் உள்ள மையமும் டிரோன் தாக்குதல்களால் கடுமையாக சேதமடைந்ததாகவும், வங்கி சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டதாகவும் அமேசான் வலைதள சேவைகள் தெரிவித்துள்ளது.
கரீம் டாக்ஸி செயலி, அலான், ஹப்-பே உள்ளிட்ட பொது சேவை செயலிகள் இதனால், கடுமையாகப் பாதிக்கப்பட்டன. ஏபிசிடி, எமிரேட்ஸ் என்பிடி போன்ற வங்கி சேவை செயலிகளும் ஸ்னோஃப்ளேக் உள்ளிட்ட மென்பொருள் நிறுவன சேவைகளும் பாதிக்கப்பட்டதால், மக்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர்.
Apps and digital services in the United Arab Emirates are reporting outages following drone strikes on Amazon Web Services’ data centers in the country. AWS said late Monday that two of its data centers in the UAE and a facility in Bahrain were damaged by drone strikes, taking the facilities offline.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.