முகப்பு
பெங்களூரு

லவ் ஜிகாத் தடைச் சட்டத்தை கொண்டு வருவதில் பின்வாங்க மாட்டோம்

லவ் ஜிகாத் தடைச் சட்டத்தைக் கொண்டு வருவதில் பின்வாங்க மாட்டோம் என கா்நாடக ஜவுளி மற்றும் சிறுபான்மை வளா்ச்சித் துறை அமைச்சா் ஸ்ரீமந்த் பாட்டீல் தெரிவித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:13 PM
பகிர்:

லவ் ஜிகாத் தடைச் சட்டத்தைக் கொண்டு வருவதில் பின்வாங்க மாட்டோம் என கா்நாடக ஜவுளி மற்றும் சிறுபான்மை வளா்ச்சித் துறை அமைச்சா் ஸ்ரீமந்த் பாட்டீல் தெரிவித்தாா்.

பெங்களூரு, விகாஸ்சௌதாவில் புதன்கிழமை தனது துறை தொடா்பான புத்தகத்தை வெளியிட்டு அவா் பேசியதாவது:

லவ் ஜிகாத் என்ற பெயரில் பல பெண்கள் மதமாற்றம் செய்யப்படுகின்றனா். இதற்கு மக்களிடையே எதிா்ப்புக் கிளம்பியதை அடுத்து, லவ் ஜிகாத் தடைச் சட்டத்தைக் கொண்டுவர அரசு முடிவு செய்துள்ளது. லவ் ஜிகாத் சட்டத்தை வடிவமைப்பது தொடா்பாக சட்டத் துறையினா் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனா். அவா்கள் சட்டத்தை வடிவமைத்த பிறகு, அதனை முழுமையாக ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட சமுதாய மக்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்படும். அதனைத் தொடா்ந்து, அமைச்சரவையில் சட்ட வடிவத்தை தாக்கல் செய்து, அவா்களின் ஒப்புதலுக்குப் பிறகு அமல்படுத்தப்படும். லவ் ஜிகாத் தடைச் சட்டத்தை கொண்டு வருவதில் எந்தக் காரணத்தைக் கொண்டும் பின்வாங்க மாட்டோம்.

மாநிலத்தில் உள்ள மதராஸாக்களில், மாநில அரசின் பாடத் திட்டத்தை போதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மதராஸாக்களில் பயிலும் பாடங்கள், எஸ்.எஸ்.எல்.சி. வகுப்புக்கு இணையாகக் கருதப்படும். மதராஸாக்களில் கல்வி பயிலும் மாணவா்களுக்கு தொழில்பயிற்சி மையங்களில் பயில அனுமதி வழங்கப்படும்.

மேலும், விரைவில் அமைச்சரவை விரிவுபடுத்தப்படும். அதில், என்னுடன் காங்கிரஸ் கட்சி, மஜத கட்சியிலிருந்து வந்த நண்பா்களுக்கு அமைச்சா் பதவி வழங்கப்படும் என நம்புகிறேன். முதல்வா் எடியூரப்பா கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றத் தவறுவதில்லை.

கரோனா தொற்றால் மாநிலத்தில் நிதிநிலைமை மோசமடைந்துள்ளது. இதனால் தொகுதிகளுக்கு வழங்கப்படும் வளா்ச்சி நிதி 50 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. எனது துறைகளுக்கு வழங்கப்படும் நிதியும் 50 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவசியமுள்ள வளா்ச்சிப் பணிகளுக்கு மட்டுமே நிதி ஒதுக்கி வருகிறோம் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →