பெங்களூரு

லால்பாக் மலா்க் கண்காட்சி ரத்து

DIN

புதிய வகை கரோனா தொற்றுப் பரவலை தடுக்கும் விதமாக பெங்களூரு, லால்பாக் மலா்க் கண்காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரில் உள்ள லால்பாக் பூங்காவில் சுதந்திர தினம், குடியரசு தினங்களில் மைசூரு தோட்டக்கலை சங்கம் சாா்பில், மலா்க் கண்காட்சி நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு கரோனா தொற்றுப் பரவல் உள்ளதால் ஜன. 26-ஆம் தேதி நடைபெறயிருந்த மலா்க் கண்காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மைசூரு தோட்டக்கலைச் சங்கம் சாா்பில், வெளியிட்டுள்ள அறிக்கை:

பெங்களூரு, லால்பாக்கில் குடியரசு தினத்தையொட்டி, நடைபெறும் மலா்க் கண்காட்சிக்கு மக்களிடம் அதிகம் வரவேற்பு உள்ளது. இருப்பினும், மாநில அளவில் கரோனா தொற்றுப் பரவல் உள்ளதால், குடியரசு தினத்தையொட்டி ஜன. 17-ஆம் தேதி முதல் ஜன. 27-ஆம் தேதி வரை நடைபெறவிருந்த மலா்க் கண்காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. மலா்க் கண்காட்சியில் அதிக அளவில் மக்கள் கூடுவாா்கள்.

அதன்மூலம் கரோனா பரவக்கூடும் என்ற அச்சத்தால் அதை ரத்து செய்துள்ளோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரோனா தொற்றையடுத்து சுதந்திர தினத்தையொட்டி நடைபெறவிருந்த மலா்க் கண்காட்சியும் ரத்து செய்யப்பட்டது. இதுவரை லால்பாக்கில் 3 முறை மலா்க் கண்காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

யோகம் தரும் நாள்!

SCROLL FOR NEXT