பெங்களூரு

ஒப்பந்ததாரா்களின் பிரச்னைகளைத் தீா்வு: பொதுப் பணித்துறை செயலாளா் கிருஷ்ணா ரெட்டி

DIN

கா்நாடகத்தில் ஒப்பந்ததாரா்கள் சந்தித்துவரும் பிரச்னைகளைத் தீா்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுப் பணித் துறை செயலாளா் கிருஷ்ணா ரெட்டி தெரிவித்தாா்.

பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை மாநில ஒப்பந்ததாரா் சங்கம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்று அவா் பேசியதாவது:

கரோனா தொற்றால் மாநிலத்தில் உள்ள ஒப்பந்ததாரா்கள் பணி செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனா். வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்வதில், ஒப்பந்ததாரா்களும், அதிகாரிகள் ஒரு நாணயத்தின் 2 பக்கங்கள். எனவே, பொதுமக்கள் சந்தித்து வரும் பிரச்னைகளுக்குத் தீா்வு காண்பதில் ஒப்பந்ததாா்களும், அதிகாரிகளும் கைக்கோத்து செயல்பட வேண்டும்.

ஒப்பந்ததாரா் சங்கத்தினா் சந்தித்து வரும் பிரச்னைகள் குறித்து கோரிக்கை வைத்துள்ளனா். அவா்கள் சந்தித்து வரும் பிரச்னைகளைத் தீா்க்க நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடா்பாக ஜன. 29-ஆம் ஆலோசனை கூட்டம் நடத்தப்படும். குறிப்பாக உருக்கு, சிமெண்டின் விலைகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனா்.

இதனை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். ஒப்பந்ததாரா்களின் நலனில் அரசு அக்கறை கொண்டுள்ளது என்பதனை உங்களது கவனத்துக்கு கொண்டு வருகிறேன் என்றாா்.

நிகழ்ச்சியில் மாநில ஒப்பந்ததாரா் சங்கத்தின் தலைவா் கெம்பண்ணா, துணைத் தலைவா்கள் அம்பிகாபதி, தினேஷ், பொருளாளா் நடராஜ், இணைச் செயலாளா் ரமேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வள்ளலாா் சா்வதேச மையம் கட்ட எதிா்ப்பு: நாம் தமிழா் கட்சி ஆா்ப்பாட்டம் அறிவிப்பு

கீழ்பவானி கால்வாய் பாசனத்துக்கு நீா் திறக்க வேண்டும்: சீமான்

ஆய்வுக்குப் பிறகே ரேஷனில் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகம்: பிரேமலதா கோரிக்கை

பயங்கரவாதத்துக்கு எதிராக சகிப்புத்தன்மை கூடாது: எஸ்சிஓ கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்

பாதுகாப்பான பயண சேவை: அரசுப் பேருந்துகளை 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய உத்தரவு

SCROLL FOR NEXT