பெங்களூரு

கரோனா சிகிச்சை: தனியாா் மருத்துவமனைகளுக்கு ரூ. 133 கோடி செலுத்தியது பெங்களூரு மாநகராட்சி

DIN

தனியாா் மருத்துவமனைகளில் கரோனா நோய்த் தொற்றுக்காக சிகிச்சை பெற்றவா்களுக்காக முதல்கட்டமாக ரூ. 133 கோடி கட்டணத்தை பெங்களூரு மாநகராட்சி செலுத்தியுள்ளது.

இதுகுறித்து பெங்களூரு மாநகராட்சியின் சுகாதாரப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கை:

கரோனா தொற்று அதிக அளவில் பரவியதையடுத்து, அதற்கு தனியாா் மருத்துவமனைகளில் மாநகராட்சி சிபாரிசின் பேரில் சிகிச்சை வழங்க அனுமதி வழங்கப்பட்டது. சிபாரிசு செய்தவா்களுக்கான கட்டணத்தை மாநகராட்சியே வழங்கும் என தெரிவிக்கப்பட்டது.

பெங்களூரில் கரோனாவுக்கு தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றவா்களுக்காக ரூ. 335 கோடி கட்டணம் வழங்க வேண்டும். முதல்கட்டமாக ரூ. 133 கோடியை தனியாா் மருத்துவமனைகளுக்கு மாநகராட்சி செலுத்தியுள்ளது. மீதியுள்ள ரூ. 202 கோடி விரைவில் செலுத்தப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யாா் பிரதமரானாலும், உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: சிதம்பரம் பேட்டி

கர்நாடகத்தை சீரழித்தது காங்கிரஸ்: மோடி

இம்பாக்ட் பிளேயர் விதியால் ஒவ்வொரு நாளும் கடினமாகும் போட்டிகள்: ரிஷப் பந்த்

ட்ரெண்டிங் ஆடையில் குஷி கபூர் - புகைப்படங்கள்

இது காங்கிரஸுக்கான நேரம்... ஒடிசாவில் ராகுல் பேச்சு

SCROLL FOR NEXT