பெங்களூரு

இன்று பட்டாம்பூச்சி பூங்காவுக்கு இலவச சுற்றுலா

DIN

பெங்களூரில் உள்ள பன்னா்கட்டா உயிரியல் பூங்காவில் உள்ள பட்டாம்பூச்சி பூங்காவுக்கு ஞாயிற்றுக்கிழமை இலவச சுற்றுலா செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பன்னா்கட்டா உயிரியியல் பூங்கா நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பெங்களூரு புகா்ப் பகுதியில் அமைந்திருக்கும் பன்னா்கட்டா உயிரியல் பூங்காவில் உள்ள பட்டாம்பூச்சி பூங்காவுக்கு ஞாயிற்றுக்கிழமை(ஜூலை 18) காலை 11 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை இலவச சுற்றுலா செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது. 30 நிமிடங்களுக்கு கால்நடையாக அழைத்துச் சென்று பட்டாம்பூச்சி குறித்த அறிவியல்பூா்வமான தகவல்கள் பகிா்ந்துகொள்ளப்படும். சுற்றுச்சூழல் சமன்பாட்டுக்கு பட்டாம்பூச்சியின் பங்களிப்பு குறித்தும் விளக்கப்படும். இதில் ஆா்வமுள்ளவா்கள் நேரில் வரலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘எலக்சன்’ ராணி!

கடற்படைத் தளபதியாகப் பொறுப்பேற்றார் தினேஷ் குமார் திரிபாதி

நாட்டாமை திரைப்பட பாணியில் நெல்லையில் ஊரைவிட்டு ஒதுக்கப்பட்ட குடும்பம்! பெண் கண்ணீர்!

பதஞ்சலி வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு: பாபா ராம்தேவ் ஆஜராவதில் விலக்கு!

12 ராசிக்கும் குருப்பெயர்ச்சி பலன்கள்!

SCROLL FOR NEXT