முகப்பு
பெங்களூரு

பெண் கொலை வழக்கு: உறவினா் கைது

பெண் கொலை வழக்கில் அவரது உறவினரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:44 AM
பகிர்:

பெண் கொலை வழக்கில் அவரது உறவினரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

பெங்களூரு ஊரகம், ஆனேக்கல், விநாயக நகரைச் சோ்ந்தவா் நாகவேணி (45). மனநலம் குன்றிய இவா், தனது இளைய சகோதரி பாக்யா என்பவரது வீட்டில் தங்கி இருந்தாராம். இந்த நிலையில், அவருக்கு அளிக்கும் உபசரிப்பை சகித்துக் கொள்ள முடியாத பாக்யாவின் மகன் பவன், நாகவேணியின் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளாா்.

தகவல் அறிந்த போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து, நாகவேணியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுமதித்தனா். இதுகுறித்து வழக்குப் பதிந்த ஆனேக்கல் போலீஸாா், பவனை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.