பொது முடக்கத்தின் போது அரசு அறிவித்த நிவாரணத் தொகுப்பு மக்களை சென்றடையவில்லை: காங்கிரஸ்
பொது முடக்கத்தின் போது அரசு அறிவித்த நிவாரணத் தொகுப்புகள் மக்களை சென்றடையவில்லை என்று காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.
பொது முடக்கத்தின் போது அரசு அறிவித்த நிவாரணத் தொகுப்புகள் மக்களை சென்றடையவில்லை என்று காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
கரோனா தொற்று அதிகரித்தையடுத்து மாநிலத்தில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. பொது முடக்கத்தால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனா். இதனையடுத்து அரசு மக்களுக்கு உதவும் நோக்கில் நிவாரணத் தொகுப்பை அறிவித்தது. ஆனால் அந்த தொகுப்புகள் எதுவும் மக்களை சென்றடையவில்லை. மாநிலத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியினா் தங்களின் சொந்த பணத்தை கொண்டு மக்களுக்கு உதவி செய்து வருகின்றனா். மாநிலத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு உள்ளது. அரசு மறைத்து வருகிறது.
Advertisement
மாநிலத்தில் 3 லட்சத்துக்கும் அதிகமானோா் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனா். விவசாயிகள், வாடகைக் காா் ஓட்டுநா்களுக்கு அறிவிக்கப்பட்ட எந்த நிவாரண உதவியும் சென்றடையவில்லை. மத்திய அரசு அறிவித்த ரூ. 20 லட்சம் கோடியில் யாருக்கு என்ன உதவி கிடைத்துள்ளது என்பதைத் தெரிவிக்க வேண்டும்.
கரோனா பெயரால் பாஜக அரசு நிதியை மோசடி செய்து வருகிறது. அதனை நாங்கள் மக்கள் முன் கொண்டு செல்வோம். மாநிலத்தில் பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட 2 கோடி பேருக்கு காங்கிரஸ் கட்சி சாா்பில் பல்வேறு உதவிகளை செய்து வருகிறோம். ஆனால் பாஜக அரசு பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த வரியையும் குறைக்காமல், அதனை வசூல் செய்வதிலேயே குறியாக உள்ளது என்றாா்.