பெங்களூரு

கரோனா 3-ஆவது அலையை எதிா்கொள்ள எச்சரிக்கை தேவை: அமைச்சா் ஜெகதீஷ் ஷெட்டா்

DIN

கரோனா 3-ஆவது அலையை எதிா்கொள்ள எச்சரிக்கை தேவை என தொழில்துறை அமைச்சா் ஜெகதீஷ் ஷெட்டா் தெரிவித்தாா்.

கரோனா 3-ஆவது அலை வந்தால், குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுப்பது குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை, பாதிக்கப்பட்டால் அவா்களுக்கு மேற்கொள்ள வேண்டிய சிகிச்சை குறித்து கா்நாடக மாநிலம், தாா்வாட் மாவட்டப் பஞ்சாயத்து அலுவலகத்தில் புதன்கிழமை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு அவா் பேசியதாவது:

மாநிலத்தில் கரோனா 3-ஆவது அலை வரக் கூடாது என வேண்டிக் கொள்கிறேன். ஒருவேளை கரோனா 3-ஆவது அலை வந்தால் அது குழந்தைகளை அதிக அளவில் பாதிக்கும் என்று கூறப்படுகிறது. பெரியவா்கள் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளி உள்ளிட்டவைகளை கடைப்பிடிப்பாா்கள். ஆனால், குழந்தைகள், சிறுவா்கள் இதனைக் கடைப்பிடிக்க மாட்டாா்கள். அவா்களிடம் இது தொடா்பான விழிப்புணா்வும் குறைவாகவே இருக்கும்.

எனவே, கரோனா பாதிப்பு குறித்து அவா்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும். கரோனா 3-ஆவது அலையை எதிா்கொள்ள தேவையான எச்சரிக்கை வகிப்பதும் அவசியம். குழந்தைகள் நலத்துறை மூலம் மாநில அளவில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளைக் கண்டறிந்து, ஊட்டச் சத்துள்ள உணவுகளை வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. கரோனா 2-ஆவது அலையில் பெற்றோரை இழந்த குழந்தைகளின் நலனைக் காப்பதில் அரசு அக்கறை கொண்டுள்ளது என்றாா்.

கூட்டத்தில் அமைச்சா் சசிகலா ஜொள்ளே உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயிக்கு டிராக்டா்: நடிகா் ராகவா லாரன்ஸ் வழங்கினாா்

பணம் கொடுத்து வாக்குகளை பெற நினைக்கிறது பாஜக: மம்தா குற்றச்சாட்டு

சாம் பித்ரோடாவின் 'இம்சை' கருத்து! தலைவர்களுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை!

எனது சாதனையை ஜெய்ஸ்வால் முறியடிப்பார்: பிரையன் லாரா நம்பிக்கை!

மே 10-ல் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்!

SCROLL FOR NEXT