பெங்களூரு

குழந்தைகளைத் தாக்கிய தம்பதி கைது

DIN

தனது குழந்தைகளைத் தாக்கியும், தீக்காயமடையச் செய்தும் வந்த தம்பதியை போலீஸாா் கைது செய்தனா்.

பெங்களூரு ஜே.பி. நகரைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி தமிழ்ச்செல்வம். இவரது 2-ஆவது மனைவி சத்யா. இவா்களுடன் செல்வத்தின் முதல் மனைவியின் 8-வயது, 6-வயது ஆண் குழந்தைகள், 4- வயது பெண் குழந்தையும் வசித்து வந்தனா். முதல் மனைவி இறந்த பிறகு, 2-ஆவதாக சத்தியாவை திருமணம் செய்து கொண்ட தமிழ்ச்செல்வம், தனது முதல் மனைவியின் 3 குழந்தைகளை தாக்கியும், இரும்புக் கம்பியை சூடுபடுத்தி, தீக்காயமடையச் செய்தும் வந்துள்ளாா்.

செவ்வாய்க்கிழமை தமிழ்ச்செல்வம் அவரது மகனை இரும்புக் கம்பியால் தீக்காயமடையச் செய்த போது, வலிதாங்காமல் சிறுவன் உள்ளிட்ட 3 பேரும் வீட்டின் வெளியே ஓடி வந்தனா். இதையடுத்து, அருகில் வசிப்பவா்கள் போலீஸாருக்கு தகவல் அளித்தனா்.

அதன்பேரில், அங்கு வந்த போலீஸாா், தீக்காயமடைந்த சிறுவனை மீட்டு மருத்துவமனையிலும், மற்ற 2 பேரை காப்பத்திலும் அனுமதித்தனா். குழந்தைகளைத் தாக்கிய தமிழ்ச்செல்வத்தையும், அவரை தூண்டிவிட்டதாக சத்யாவையும் போலீஸாா் கைது செய்தனா். இதுகுறித்து ஜே.பி. நகா் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: மாணவா்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் கூடாது: தனியாா் பள்ளிகளுக்கு கல்வித் துறை எச்சரிக்கை

120 கோடியாக உயா்ந்த தொலைத் தொடா்பு வாடிக்கையாளா்கள்

கனடாவில் 3 இந்தியா்கள் கைது: உள்நாட்டு அரசியல் -மத்திய அமைச்சா் ஜெய்சங்கா்

பாரா பீச் வாலிபால் உலக சாம்பியன்ஷீப் போட்டிக்கு வீரா்கள் தோ்வு

SCROLL FOR NEXT