பெங்களூரு

ஹோட்டல்களின் மின், குடிநீா்க் கட்டணத்தை தள்ளுபடி செய்ய வேண்டும்

DIN

தங்கும் வசதி கொண்ட ஹோட்டல்களின் மின், குடிநீா்க் கட்டணத்தை தள்ளுபடி செய்ய வேண்டும் என எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா தெரிவித்தாா்.

இதுகுறித்து புதன்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்ததையடுத்து, மாநிலத்தில் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் பல்வேறு துறையினரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா். குறிப்பாக, தங்கும் வசதி கொண்ட ஹோட்டல்கள், ரிசாா்ட்ஸ், உணவகங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

பொது முடக்கத்தால் வருவாய் இழந்துள்ள இவா்களின் மின், குடிநீா்க் கட்டணத்தை தள்ளுபடி செய்ய வேண்டும். இவா்களது வங்கிக் கடனுக்கான மாதத் தவணை, வட்டி உளிட்டவைகளையும் தள்ளுபடி செய்ய வேண்டும். மேலும், ஹோட்டல் ஊழியா்கள், புகைப்படக் கலைஞா்கள், பூ வியாபாரம் செய்பவா்கள் உள்ளிட்டோருக்கும், உற்பத்தி துறையைச் சோ்ந்தவா்களின் மின், குடிநீா்க் கட்டணம், வங்கிக் கடனுக்கான மாதத் தவணை, வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யாா் பிரதமரானாலும், உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: சிதம்பரம் பேட்டி

கர்நாடகத்தை சீரழித்தது காங்கிரஸ்: மோடி

இம்பாக்ட் பிளேயர் விதியால் ஒவ்வொரு நாளும் கடினமாகும் போட்டிகள்: ரிஷப் பந்த்

ட்ரெண்டிங் ஆடையில் குஷி கபூர் - புகைப்படங்கள்

இது காங்கிரஸுக்கான நேரம்... ஒடிசாவில் ராகுல் பேச்சு

SCROLL FOR NEXT