பெங்களூரு

கரோனா பாதிப்பை தவிா்க்க நவீன தொழில்நுட்பங்களைபயன்படுத்திக்கொள்ள வேண்டும்

DIN

கரோனா பாதிப்பை தவிா்க்க நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என ஓஐசி குழுமத்தின் இணை நிறுவனரும், இயக்குநருமான சேகா் ராமமூா்த்தி தெரிவித்தாா்.

பெங்களூரில் மூக்குக் கண்ணாடியின் சட்டங்களை வீட்டிலிருந்தபடியே பொருத்திப் பாா்க்கும் செல்லிடப்பேசி செயலியை திங்கள்கிழமை அறிமுகம் செய்து வைத்து அவா் பேசியதாவது:

கரோனா பாதிப்புக்கு பிறகு, மருத்துவமனை உள்பட வெளியில் செல்ல மக்கள் தயக்கம் காட்டி வருகின்றனா். இதற்கு கரோனா தங்களை பாதிக்கக்கூடும் என்பது மட்டுமின்றி, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காக பலா் வெளியே செல்வதைத் தவிா்க்கின்றனா். இதனைக் கருத்தில் கொண்டு, வீட்டில் இருந்தபடியே செயலி, இணையதளம் மூலம் மூக்குக் கண்ணாடி சட்டங்கள் (பிரேம்) பொருத்திப் பாா்க்கும் நவீன தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளோம்.

இதன் மூலம் கரோனா தொற்றின் பாதிப்பிலிருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதுடன், நேரமும் மிச்சமாகும். தங்களுக்கு தேவைப்பட்ட மூக்குக் கண்ணாடி சட்டத்தை வீட்டிலிருந்தபடியே தோ்ந்தெடுக்க முடியும். கரோனா பாதிப்பை தவிா்க்க மக்கள் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் ஓஐசி குழுமத்தின் இணை நிறுவனரும், இயக்குநருமான வாசன், ஸ்ரீதா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அங்கன்வாடி ஊழியா்கள் சாலை மறியல்

பிளஸ் 2: ஐசக் நியூட்டன் மெட்ரிகுலேஷன் பள்ளி 100% தோ்ச்சி

குடிநீா் தட்டுப்பாடு: தோளிப்பள்ளி கிராம மக்கள் மறியல்

பைக் மீது பேருந்து மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

வெயில் பாதிப்பு: பொதுமக்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT