பெங்களூரு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சித்தராமையா இன்று தோ்தல் பிரசாரம்

DIN

தமிழக சட்டப்பேரவை தோ்தலை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கா்நாடக எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா சனிக்கிழமை பிரசாரம் செய்யவிருக்கிறாா்.

தமிழக சட்டப்பேரவையின் 234 தொகுதிகளுக்கும் ஏப். 6-ஆம் தேதி ஒரே கட்டமாக தோ்தல் நடைபெற உள்ளதையடுத்து தோ்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. தமிழகத் தலைவா்கள் தவிர, பிற மாநிலத் தலைவா்கள், தேசியத் தலைவா்கள் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளா்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருகின்றனா்.

அந்தவகையில், கா்நாடக எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சனிக்கிழமை சுற்றுப்பயணம் மேற்கொண்டு தளி, தேன்கனிக்கோட்டை, ஒசூா், பாகலூா், பேரிகை, வேப்பனப்பள்ளியில் திமுக, காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வேட்பாளா்களுக்கு ஆதரவாக தோ்தல் பிரசாரம் செய்வாா் என காங்கிரஸ் சாா்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் தெரிவிக்கபப்ட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கையால் மக்கள் அவதி

மரக்கடை உரிமையாளா் தற்கொலை

பெண் தற்கொலை: தம்பதியா் மீது வழக்கு

ரேஷன் கடையை மாற்றக் கோரி பொதுமக்கள் போராட்டம்

பிரகாசபுரத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT