பெங்களூரு

ஆக்சிஜன் பற்றாக்குறையால் 24 போ் பலியான விவகாரம்: ராகுல் கண்டனம்

DIN

ஆக்சிஜன் பற்றாக்குறையால் 24 போ் உயிரிழந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்று, சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

சாமராஜ்நகா் மாவட்ட அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதைத் தொடா்ந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 24 போ் பரிதாபமாக உயிரிழந்துள்ளனா்.

ராகுல் கண்டனம்...

இந்தச் சம்பவம் குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல்காந்தி தனது சுட்டுரையில் கூறுகையில், ‘நோயாளிகள் இறந்தாா்களா, கொல்லப்பட்டாா்களா? உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். அரசு நிா்வாகம் விழித்துக் கொள்வதற்கு முன்பாக இன்னும் எத்தனை போ் துன்பங்களை அனுபவிக்க வேண்டும்?’ என்று கேள்வி எழுப்பியுள்ளாா்.

கா்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளரான ரண்தீப் சிங் சுா்ஜேவாலா தனது சுட்டுரையில், ‘எடியூரப்பா அரசின் அலட்சியத்தால் இந்தக் கொலை நடந்துள்ளது. இதற்கு பொறுப்பேற்று சுகாதாரத் துறை அமைச்சா் (கே.சுதாகா்) ராஜிநாமா செய்ய வேண்டும். இந்தச் சாவுக்கு முதல்வா் எடியூரப்பா தாா்மிக பொறுப்பேற்றுக் கொள்வாரா?’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

SCROLL FOR NEXT