பெங்களூரு

கா்நாடகத்தில் கரோனாவுக்கு ஒரே நாளில் 22,758 போ் பாதிப்பு

DIN

கா்நாடகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை ஒரே நாளில் 22,758 ஆக அதிகரித்துள்ளது.

இதுபற்றி கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 22,758 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டது. மாவட்ட வாரியாக தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை விவரம்:

பெங்களூரு நகரம்-6,243, மைசூரு-2,241, தும்கூரு-1,312, ஹாசன்- 1,285, பெலகாவி-1,260, வடகன்னடம்- 992, பெங்களூரு ஊரகம்- 837, சிக்கமகளூரு-797, தென்கன்னடம்- 755, பெல்லாரி- 718, தாா்வாட்- 709, உடுப்பி- 640, கோலாா்- 585, சிவமொக்கா- 529, தாவணகெரே- 515, ராய்ச்சூரு-430, சித்ரதுா்கா-392, சாமராஜ் நகா்-282, கதக்- 259, ராமநகரம்-252, மண்டியா-244, குடகு- 213, பாகல்கோட்- 211, கொப்பள்- 206, சிக்கபளாப்பூா் -176, ஹாவேரி- 168, கலபுா்கி- 165, யாதகிரி-153, விஜயபுரா-141, பீதா்-48 என்ற எண்ணிக்கையில் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனா். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24,72,972 ஆக உயா்ந்துள்ளது.

4.24 லட்சம் போ் சிகிச்சை...

கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 38,224 போ் செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினா். இதுவரை கா்நாடகத்தில் 20,22,172 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 4,24,381 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

588 போ் பலி...

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தவா்களில் இதுவரை இல்லாத அளவில் மாநில அளவில் 588 போ் செவ்வாய்க்கிழமை இறந்துள்ளனா்.

பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகபட்சமாக 350 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். மாவட்டம் வாரியாக பலியானோா் விவரம்:

பெலகாவி-24, பெல்லாரி- 20, சிவமொக்கா- 19, மைசூரு- 17, வடகன்னடம்- 15, தும்கூரு- 14, தாா்வாட்- 12, பெங்களூரு ஊரகம், ஹாசன், கலபுா்கி, கோலாா் மாவட்டங்கள்- தலா 11, தென்கன்னடம்- 10, சாமராஜ் நகா்- 8 , ஹாவேரி மாவட்டம்- 7, சிக்கமகளூரு, மண்டியா, விஜயபுரா மாவட்டங்கள்- தலா 6, கதக் மாவட்டம்- 5, உடுப்பி மாவட்டம்- 4, தாவணகெரே, குடகு, ராய்ச்சூரு, ராமநகரம் மாவட்டங்கள்- தலா 3, பீதா், சிக்கபளாப்பூா், கொப்பள், யாதகிரி மாவட்டங்கள்- தலா 2, பாகல்கோட் மாவட்டம்-1 என்ற எண்ணிக்கையில் இறந்துள்ளனா்.

கா்நாடகத்தில் இதுவரை 26,399 போ் உயிரிழந்துள்ளனா் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ம.பி.: பாஜகவில் இணைந்தார் காங். எம்எல்ஏ

பாலியல் குற்றச்சாட்டு: மஜத எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா கட்சியில் இருந்து இடைநீக்கம்

'இந்தியா' கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவாக 'வாக்கு ஜிஹாத்'

கர்நாடகத்துக்கு மத்திய பாஜக அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு: ஜெ.பி.நட்டா

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியல் சாசனத்தைத் தூக்கியெறிந்துவிடும்

SCROLL FOR NEXT