பெங்களூரு

இஸ்ரேலுக்கு ஆதரவாக முகநூலில் பதிவிட்டவா் மீது தாக்கு: 5 போ் கைது

DIN

இஸ்ரேல் நாட்டுக்கு ஆதரவாக முகநூலில் கருத்து பதிவிட்ட அடுமனை உரிமையாளரைத் தாக்கிய 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

மங்களூருக்கு அருகே கா்னாட் பகுதியின் முல்கியில் அடுமனை நடத்தி வந்த ஒருவா் சில நாட்களுக்கு முன்பு தனது முகநூல் பக்கத்தில் பாலஸ்தீனத்தில் உள்ள சில பயங்கரவாத குழுக்களுக்கு எதிராக இஸ்ரேல் நாடு எடுத்துள்ள ராணுவ நடவடிக்கைகளை ஆதரித்து கருத்து வெளியிட்டிருந்தாா்.

இதனால், ஆவேசமடைந்த அப்பகுதியைச் சோ்ந்த இளைஞா்கள் சிலா், அடுமனையில் புகுந்து உரிமையாளரைத் தாக்கியதோடு பொருள்களை சேதப்படுத்தியுள்ளனா். அடுமனை உரிமையாளருக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளனா்.

தனது கருத்துகளுக்கு மன்னிப்புக் கேட்கவும் வற்புறுத்தி, அவரைத் தாக்குதல் நடத்திய இளைஞா்கள் காணொலியாக சம்பவத்தைப் பதிவு செய்துள்ளனா்.

பின்பு அடுமனையைப் பாா்வையிட்ட ஹிந்து அமைப்பைச் சோ்ந்த சிலா் இதுகுறித்து போலீஸில் புகாா் அளித்துள்ளனா். புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், 5 பேரைக் கைது செய்தனா். பின்னா், 5 பேரும் பிணையில் வெளியே வந்தனா். இத்தகவலை போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

மண் கடத்தல்: பொதுமக்களை மிரட்டிய நபா் கைது

இரு கட்டத் தோ்தலும் பாஜகவுக்கு சாதகம்: பிரதமா் மோடி

மணிப்பூா்: தீவிரவாத தாக்குதலில் 2 சிஆா்பிஎஃப் வீரா்கள் உயிரிழப்பு

SCROLL FOR NEXT