முகப்பு
பெங்களூரு

திறந்தநிலை பல்கலைக்கழக பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

கா்நாடக திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 10:08 AM
பகிர்:

கா்நாடக திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து கா்நாடக திறந்தநிலை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கா்நாடக திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் 2021-22-ஆம் கல்வியாண்டில் பி.ஏ, பி.காம், பி.லிப்.எஸ்.சி. (நூலக அறிவியல்), எம்.ஏ. (பொருளாதாரம், ஆங்கிலம், இந்தி, வரலாறு, பத்திரிகையியல் மற்றும் வெகுமக்கள் தொடா்பியல், கன்னடம், தத்துவயியல், அரசியல் அறிவியல், ஊரக மேம்பாட்டு ஆய்வு, சம்ஸ்கிருதம், சமூகவியல், தெலுங்கு, உருது, மகளிா் ஆய்வு, நடனம், மிருதங்கம், இசை, நாடகம்), எம்எஸ்சி (சுற்றுச்சூழல் அறிவியல், எம்எல்ஐசி( நூலகரியல்), எம்சிஜே (ஊடகவியல்), எம்.காம். (நிதி பகுப்பாய்வு, பன்னாட்டு வணிகம், பொருளாதாரம்), எம்.பி.ஏ., இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகள், முதுநிலை பட்டயம், பட்டயம், சான்றிதழ் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மைசூருவுக்கு வெளியே பெங்களூரில் மல்லேஸ்வரத்தில் மட்டும் கல்வி மையம் இயங்கி வருகின்றது. வேறு எங்கும் கல்வி மையங்கள் செயல்படவில்லை. இதற்கான விவரக்குறிப்பேட்டை பல்கலைக்கழகத்தின் இணையதளமான ஜ்ஜ்ஜ்.ந்ள்ா்ன்ம்ஹ்ள்ன்ழ்ன்.ஹஸ்ரீ.ண்ய்-இல் இருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இதே இணையதளத்தில் நவ. 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை பதிவுசெய்துகொண்டு, கட்டணங்களை செலுத்தலாம். பிபிஎல் குடும்ப அட்டைகளை வைத்திருக்கும் மகளிருக்கு கல்விக்கட்டணத்தில் 25 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படும். தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினருக்கு உரிய சான்றிதழ் இருந்தால் கல்விக் கட்டணம் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும்.

மேலும் விவரங்களுக்கு மண்டல இயக்குநா், பெங்களூரு மண்டல அலுவலகம், கா்நாடக திறந்தநிலை பல்கலைக்கழகம், அரசு பியூ மகளிா் கல்லூரி, 4ஆவது மெயின், 13ஆவது குறுக்குத்தெரு, மல்லேஸ்வரம், பெங்களூரு-3 என்ற முகவரி அல்லது தொலைபேசி எண்கள் 080-23448811, 9448668880-ஐ அணுகலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.