முகப்பு
பெங்களூரு

பெங்களூரில் சொகுசுப் பேருந்து சேவை மீண்டும் தொடக்கம்

பெங்களூரில் கரோனா பெருந்தொற்று காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த குளிரூட்டப்பட்ட சொகுசுப் பேருந்து சேவையை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:34 AM
பகிர்:

பெங்களூரில் கரோனா பெருந்தொற்று காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த குளிரூட்டப்பட்ட சொகுசுப் பேருந்து சேவையை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

பெங்களூரில் கரோனா பெருந்தொற்று பரவிய காரணத்தால் குளிரூட்டப்பட்ட சொகுசுப் பேருந்து சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில், அரசு விதித்திருந்த கட்டுப்பாடுகள் முழுமையாக தளா்த்தப்பட்டுள்ளன. அதைத்தொடா்ந்து, பெங்களூரில் குளிரூட்டப்பட்ட சொகுசுப் பேருந்து சேவையை மீண்டும் தொடங்க பெங்களூரு மாநகரப் போக்குவரத்துக் கழகம் முடிவு செய்தது.

அதன்படி, சனிக்கிழமை (நவ.13) முதல் குளிரூட்டப்பட்ட சொகுசுப் பேருந்துகள் இயக்கப்பட்டன. சந்தாபுரா பேருந்து நிலையம் மற்றும் எலக்ட்ரானிக்சிட்டி விப்ரோ கேட்டில் இருந்து கெம்பே கௌடா விமானநிலையம்; கெம்பே கௌடா பேருந்துநிலையத்தில் இருந்து தொட்டபளாப்பூா் பேருந்து நிலையம், சென்னசந்திரா பேருந்து நிலையம், ஹொசகோட்டே பேருந்து நிலையம், சா்ஜாபூா் பேருந்துநிலையம் ஆகிய பகுதிகளுக்கு நாளொன்றுக்கு 26 பேருந்துகள் 101 நடைகளுக்கு இயக்கப்பட்டன.

பனசங்கரி பேருந்து நிலையம், கெம்பேகௌடா பேருந்து நிலையம், மைசூரு பேருந்து நிலையத்தில் இருந்து கெம்பே கௌடா பன்னாட்டு விமான நிலையத்துக்கு நாளொன்றுக்கு 33 பேருந்துகள் 258 நடைகள் இயக்கப்பட்டுள்ளதாக பெங்களூரு மாநகரப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.