பெங்களூரு

பெங்களூரு மெட்ரோ ரயில் சேவை இரவு 11 மணி வரை நீட்டிப்பு

DIN

பெங்களூரில் மெட்ரோ ரயில் சேவை நேரம் இரவு 11 மணி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து பெங்களூரு மெட்ரோ ரயில்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெங்களூரு மெட்ரோ ரயில் கழகம் சாா்பில் பெங்களூரின் வடக்கு- தெற்கு பகுதியில் பச்சை வழித்தடம் மற்றும் கிழக்கு- மேற்கு பகுதியில் ஊதா வழித்தடத்தை இயக்கி வருகிறது. பையப்பனஹள்ளி முதல் கெங்கேரி வரையிலான ஊதா வழித்தடமும், நாகசந்திரா முதல் பட்டு வாரியம் வரையிலான பச்சை வழித்தடமும் இயக்கப்பட்டு வருகிறது.

கரோனா காரணமாக இதுவரை காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை இயக்கப்பட்டு வந்த மெட்ரோ ரயில் சேவை வியாழக்கிழமை (நவ.18) முதல் காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை இயக்கப்பட உள்ளது. அதன்படி, ஞாயிறு நீங்கலாக, வார நாள்களில் பையப்பனஹள்ளி, கெங்கேரி, நாகசந்திரா, பட்டுவாரியம் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து இரவு 11 மணியளவில் கடைசி ரயில் இயக்கப்படும்.

ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு ரயில் சேவைகள் தொடங்கும். அனைத்து நாள்களிலும் கெம்பே கௌடா ரயில் நிலையத்தில் இருந்து எல்லா திசைகளுக்கும் இரவு 11 மணி அளவில் கடைசி ரயில் புறப்படும். ஊதா தடம் மற்றும் பச்சை தடத்தில் பயணிகள் வருகை அதிகமாக இருக்கும் நேரத்தில் 5 நிமிடத்துக்கு ஒருமுறை, சாதாரண நேரத்தில் 10 நிமிடத்துக்கு ஒருமுறை மெட்ரோ ரயில் இயக்கப்படுகின்றன.

கெங்கேரி முதல் பட்டு வாரியம் வரையிலான தடத்தில் நாள்முழுவதும் 10 நிமிடத்துக்கு ஒருமுறை ரயில்கள் இயக்கப்படுகின்றன. சனி, ஞாயிறுக்கிழமை மற்றும் பொதுவிடுமுறை நாள்களில் பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும் நேரத்தில் கூடுதல் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

பயணிகள் முகக்கவசம் அணிந்து வர வேண்டும். தனிநபா் இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். கைகளை கிருமிநாசினியால் தூய்மைப்படுத்த வேண்டும். இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமலை: 77,848 பக்தா்கள் தரிசனம்

பேருந்து மோதி தனியாா் நிறுவன ஊழியா் பலி

கோடை விடுமுறை: விமான சேவைகள் அதிகரிப்பு

உதகை, கொடைக்கானல்: வாகனங்கள் இன்றுமுதல் இ-பாஸ் பெறலாம்

மின் வாரிய ஆள்குறைப்பு ஆணைகளை ரத்து செய்ய கோரிக்கை

SCROLL FOR NEXT