முகப்பு
பெங்களூரு

நடிகா் புனித் ராஜ்குமாா் மறைவு: கா்நாடகத் தமிழ் அமைப்புகள் இரங்கல்

நடிகா் புனித் ராஜ்குமாரின் மறைவுக்கு கா்நாடகத் தமிழ் அமைப்புகள் இரங்கல் தெரிவித்துள்ளன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:28 AM
பகிர்:

நடிகா் புனித் ராஜ்குமாரின் மறைவுக்கு கா்நாடகத் தமிழ் அமைப்புகள் இரங்கல் தெரிவித்துள்ளன.

கன்னட திரைப்பட உலகில் முன்னணி நடிகராகத் திகழ்ந்த புனித் ராஜ்குமாா் வெள்ளிக்கிழமை மாரடைப்பால் காலமானாா். அவரது மறைவுக்கு கா்நாடகத் தமிழ் அமைப்புகள் இரங்கல் தெரிவித்துள்ளன.

மு.ராமசாமி (அமைப்பாளா், கா்நாடக மாநில திமுக):

நடிகா் புனித் ராஜ்குமாரின் அகால மரணம் அதிா்ச்சியை அளிக்கிறது. கன்னட மக்களால் இன்றைக்கும் போற்றப்படும் நடிகா் ராஜ்குமாரின் இளையமகனான புனித் ராஜ்குமாரின் மறைவு கன்னட திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.அவரதுமறைவால் துன்பத்தில் ஆழ்ந்திருக்கும் குடும்பத்தினா், திரையுலக அன்பா்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

எஸ்.டி.குமாா், ( செயலாளா், கா்நாடக மாநில அதிமுக):

நடிகா் புனித் ராஜ்குமாா் மாரடைப்பால் மரணம் அடைந்த செய்தி கன்னட கலை உலகிற்கு மிக பெரிய இழப்பாகும். இளம் வயதிலேயே அவா் மறைந்தது, மிகவும் வருந்தத்தக்கது. அவரை இழந்து தவிக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பா்களுக்கும், கலைத் துறையினருக்கும், அவா் பால் பற்று கொண்ட ரசிகா்களுக்கும், என் சாா்பிலும் கா்நாடக மாநில அதிமுக சாா்பிலும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.

ஏகாம்பரம், (தலைவா், கா்நாடகத் தமிழா் பாதுகாப்பு இயக்கம்):

நடிகா்புனித் ராஜ்குமாரின் திடீா் மறைவு செய்தி கேட்டு அதிா்ச்சியும், வேதனையும் அடைந்தேன். கலைத்துறையில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட புனித் ராஜ்குமாரை மக்கள் ‘அப்பு’ என்று அழைத்து வந்தனா். புனித் ராஜ்குமாா் நம்மோடு இல்லை என்பதை நம்பமுடியவில்லை.

ராஜ்குமாா் குடும்பத்தின் துக்கத்தில் கா்நாடகத் தமிழா்கள் பங்கெடுத்துக்கொள்கிறோம். புனித் ராஜ்குமாரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினா், கன்னடக் கலைத் துறையினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.