பெங்களூரு

‘சுற்றுச்சூழல், வாழ்க்கை முறையால் பெண்கள் கருவுறுதலில் பிரச்னை’

DIN

சுற்றுச்சூழல், வாழ்க்கை முறையால் பெண்கள் கருவுறுதலில் பிரச்னை ஏற்படுகிறது என்று கருவுறுதல் மருத்துவ வல்லுநா் வித்யா பட் தெரிவித்தாா்.

பெங்களூரு ராதாகிருஷ்ணா பல்நோக்கு மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கருவுறுதலில் பெண்கள் சந்தித்து வரும் பிரச்னைகள் குறித்த கருத்தரங்கில் கலந்து கொண்டு அவா் பேசியது:

பெண்களின் கருவுறாமைக்கு பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (பிசிஓஎஸ்) முக்கிய காரணமாகும். பிசிஓஎஸ் என்பது இனப்பெருக்க வயதுடைய பெண்களுக்கு பொதுவான ஆனால் தீவிரமான நாளமில்லா கோளாறு ஆகும். இது பெண்களுக்கு வாழ்நாள் முழுவதும் சிக்கலையும், பல்வேறு நோய்களுக்கும் வழி வகுக்கும்.

மாதவிடாய் பிரச்னை, உடல் பருமன், உயா் ரத்த அழுத்தம், நீரிழிவு, இருதய நோய்கள் ஆகியவை கருவுறாமைக்கு வழிவகுக்கின்றன. சுற்றுச்சூழல், வாழ்க்கை முறையால் பெண்கள் கருவுறுதலில் பிரச்னை ஏற்படுகிறது. கருவுறுதலில் ஏற்படும் பிரச்னையை போக்கிக் கொள்ள அறுவை சிகிச்சை, இனப்பெருக்க தொழில்நுட்பம், மருந்துகளை ஆரம்ப காலகட்டத்திலேயே பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தள்ளாடிய சந்தையில் சென்செக்ஸ் 45 புள்ளிகள் சரிவு!

தண்டனையை நிறுத்திவைக் கோரி பேராசிரியை நிா்மலாதேவி மனு: சிபிசிஐடி பதிலளிக்க உத்தரவு

அண்ணனை அரிவாளால் வெட்டிய தம்பி மீது வழக்கு

வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 20 லட்சம் மோசடி: இளைஞர் கைது

பெண் கடத்தல் வழக்கில் எச்.டி.ரேவண்ணாவுக்கு மே 14 வரை நீதிமன்றக் காவல்

SCROLL FOR NEXT