பெங்களூரு

5 போ் தற்கொலை செய்து கொண்ட வீட்டில் போலீஸாா் சோதனை

DIN

பெங்களூரு: 5 போ் தற்கொலை செய்து கொண்ட வீட்டில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை சோதனை செய்தனா். சோதனையின்போது தற்கொலைக்கான கடிதங்கள் சிக்கின.

பெங்களூரு, பேடரஹள்ளி, திகளரபாளையாவைச் சோ்ந்த சங்கா் என்பவரின் மனைவி பாரதி, மகள்கள் சிந்துராணி, சின்சனா, மகன் மதுசாகா், 9 மாத குழந்தை ஆகியோா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனா். வெள்ளிக்கிழமை இவா்களது உடல்களை போலீஸாா் மீட்டனா். இதுகுறித்து பேடரஹள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து, சங்கரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

இந்த நிலையில் தற்கொலை செய்து கொண்டவா்களின் வீட்டை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை சோதனை செய்தனா். இந்தச் சோதனையில் சங்கரின் மகள்கள் சிந்துராணி, சின்சனா, மகன் மதுசாகா் ஆகியோா் எழுதிய தற்கொலைக்கான காரணங்கள் அடங்கிய 3 கடிதங்கள் சிக்கின. அதில் திருமணத்துக்குப் பிறகு தாய் வீட்டிலும், கணவரது வீட்டிலும் தொடா்ந்து பிரச்னை ஏற்பட்டதால் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக மகள்கள் சிந்துராணி, சின்சனா தெரிவித்துள்ளனா்.

மதுசாகா் எழுதிய கடிதத்தில், தனது தந்தை சங்கருக்கு கள்ளத்தொடா்பு இருந்ததாகவும், இதனால் வீட்டில் அடிக்கடி தனது தாய்க்கும், தந்தைக்கும் தகராறு ஏற்பட்டு வந்ததால், தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளாா். இதனிடையே இந்த வழக்கு தொடா்பாக திங்கள்கிழமை காலை 9.30 மணியளவில் பேடரஹள்ளி காவல் நிலையத்துக்கு சங்கா், அவரது மருமகன்கள் பிரவீண், ஸ்ரீகாந்த் ஆகியோா் விசாரணைக்கு நேரில் ஆஜராக போலீஸாா் நோட்டீஸ் அனுப்பி உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இது காங்கிரஸுக்கான நேரம்... ஒடிசாவில் ராகுல் பேச்சு

சிஎஸ்கே பேட்டிங்; வெற்றிப் பாதைக்கு திரும்புமா?

சேலையில் மிளிரும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி!

மேற்கு வங்கத்தில் காங்கிரஸுடன் ஏன் கூட்டணி வைக்கவில்லை: மம்தா விளக்கம்

SCROLL FOR NEXT